எல்லா எழுத்து
எல்லா எழுத்து (pangram, கிரேக்கம்: παν γράμμα, pan gramma, "எல்லா எழுத்து") அல்லது முழு அரிச்சுவடி வாக்கியம் என்பது ஒரு மொழியின் அரிச்சுவடியிலுள்ள அனைத்து எழுத்துக்களாலும் அமைக்கப்பட்ட சொற்றொடரைக் குறிக்கும். இது அச்செழுத்தின் வடிவத்தை காட்ட, அச்செழுத்து கருவியை பரிசோதிக்க, கையெழுத்து, வனப்பெழுத்து மற்றும் தட்டச்சுத் திறனை வளர்க்கவென பாவிக்கப்பட்டது. சில எடுத்துக் காட்டுகள்:
- ஆங்கிலத்தில், "The quick brown fox jumps over the lazy dog" (எல்லா 26 எழுத்துக்களும்).[1]
- டச்சு மொழி, "Lynx c.q. vos prikt bh: dag zwemjuf!" (26 எழுத்து சிறப்பு சொற்றொடர் எல்லா 26 எழுத்துக்களுடன்).
- இடாய்ச்சு மொழியில், "Victor jagt zwölf Boxkämpfer quer über den großen Sylter Deich".
- பிரெஞ்சு மொழியில், "Portez ce vieux whisky au juge blond qui fume" (எல்லா 26 எழுத்துக்களும்).
குறிப்புக்கள்
தொகு- ↑ "Interesting Notes". The Michigan School Moderator (Grand Rapids, Michigan) 5 (26): 514. March 14, 1885.