எல்லெனோட்டோமியி

பண்டைய கிரேக்கத்தின் பதவி

எல்லெனோட்டோமியி (Hellenotamiae, அட்டிக் கிரேக்கம் : ἑλληνοταμίαι [1] ) என்பது ஒரு பண்டைய கிரேக்கச் சொல். இது பொதுக் கருவூலர் குழுவைக் குறிக்கிறது. [2] எல்லெனோட்டோமியா ஏதெனியர்களால் நியமிக்கப்பட்ட பத்து நீதிபதிகள் (ஒவ்வொரு பழங்குடிப்பிரிவிலிருந்தும் ஒருவர், தேவைப்பட்டால் தேர்தல் மூலம்) ஆவர். இவர்கள் டெலியன் கூட்டணி நாடுகளின் கப்பம் அல்லது மகமைத் தொகையைப் பெறுவதற்காக, கூட்டணியின் தலைமை நிதி அதிகாரிகளாக இருந்தனர். [3]

இவர்கள் முதன்முதலில் கிமு 477 இல் நியமிக்கப்பட்டனர். கிரேக்கத்தின் வெவ்வேறு நகர அரசுகள் செலுத்திய மொத்த பணமாக முதலில் 460 டாலெட்டுகள் என நிர்ணயிக்கப்பட்டது. அத்தொகையானது டெலோஸ் தீவில் உள்ள கருவூலத்தில் வைக்கப்பட்டது. இத்தீவு கூட்டணி அரசுகளின் கலந்துரையாடல் கூட்டம் நடக்கும் இடமாக இருந்தது; எல்லெனோடமியாக்கள் நகர அரசுகளிடம் மகமைத் தொகையை வசூலித்தது மட்டுமல்லாமல், இந்த பணத்தின் பாதுகாவலர்களாகவும் இருந்தனர் என்பதில் சந்தேகம் இல்லை, அவை வரலாற்றாளர் செனபோனால் ஹெலெனோடோமியா (Ἑλληνοταμία) என அழைக்கப்பட்டது. [4] [5] [6] [7]

கிமு 454/453 [3] இல் கருவூலம் டெலோசிலிருந்து ஏதென்சுக்கு பெரிக்கிள்ஸ் மாற்றினார். [6] [8] கூட்டணி நாடுகளின் அதிகாரத்தின் பேரில் பொதுவான இராணுவ நடவடிக்கையின் போது ஏதெனியன் தளபதிக்கு கருவூலத்தில் இருந்து பணம் வழங்கப்பட்டது. மேலும் கட்டுமானத்திற்காகவும் (எ.கா. அக்ரோபோலிஸ் கட்டிடங்கள்) பணம் வழங்கப்பட்டது. கிமு 411 ஆம் ஆண்டில் ஆட்சிக்கவிழ்க்கப்பட்டு சிலவர் ஆட்சி ஏற்பட்டபோது இருபது எலனோடோமியாவின் குழுவின்ற்கு ஏதென்சின் அரசு கருவூலத்தின் மீதும், டெலியன் கூடணியின் மீதும் அதிகாரம் வழங்கப்பட்டது. [3]

கிமு 404 இல் பெலோபொன்னேசியர்களால் ஏதென்சு கைப்பற்றப்பட்டவுடன் இந்த அலுவலகம் அகற்றப்பட்டது. சனநாயகம் மீட்டெடுக்கப்பட்ட பிறகு எலனோடாமியா பதவிக்கு மீண்டும் யாரும் நியமிக்கப்படவில்லை. [9] [10]

மேற்கோள்கள்

தொகு
  1. In an Old Attic Greek inscription the word is found as ελλενοταμίασι: SEG 39:21 (archaic spelling, inflected form).
  2. Smith, William (1870), "Hellenotamiae", in Smith, William (ed.), Dictionary of Greek and Roman Antiquities, Boston: Little, Brown and Company, pp. 590–591, archived from the original on 2010-11-19, பார்க்கப்பட்ட நாள் 2022-02-27
  3. 3.0 3.1 3.2 Gomme, Arnold Wycombe (1996), "hellenotamiai", in Hornblower, Simon (ed.), Oxford Classical Dictionary, Oxford: Oxford University Press
  4. Xenophon, de Vectig. v. 5
  5. Thucydides, i.95
  6. 6.0 6.1 Plutarch, Aristides 24-25
  7. Andocides, de Pace p. 107
  8. Diodorus Siculus, xii. 38
  9. Philipp August Boeckh, The Public Economy of Athens p. 176, 2nd ed.
  10. Corp. Inscrip. No. 147
"https://ta.wikipedia.org/w/index.php?title=எல்லெனோட்டோமியி&oldid=3593885" இலிருந்து மீள்விக்கப்பட்டது