எல். கே. திரிபாதி

இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள்

எல். கே. திரிபாதி (L.K. Tripathy) இந்தியாவின் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர். 1971-ஆம் ஆண்டில் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான இவர், தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளராக பணியாற்றியவர்.[1][2][3]

எல். கே. திரிபாதி
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர்
பதவியில்
15 மே 2006 – 31 அகத்து 2008
முன்னையவர்என். நாராயணன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஒடிசா, இந்தியா
தேசியம்இந்தியர்
கல்விஇ. ஆ. ப
இணையத்தளம்தமிழ்நாடு தலைமை செயலகம்

அரசுப் பணிகள்

தொகு

1971 ஆம் ஆண்டு தமிழக பிரிவு இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக பணியில் இணைந்தார். பல்வேறு முக்கிய துறைகளில் பணியாற்றிய இவர் தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த என். நாராயணனின் பணி இடமாற்றத்திற்கு பின்னர் தமிழகத்தின் 37-வது தலைமைச் செயலாளராக 15 மே 2006 அன்று பொறுப்பேற்றார். 2008-ம் ஆண்டு அகத்து 31-ம் தேதி பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இதைத் தொடர்ந்து, அவர் தனது சொந்த மாநிலமான ஒடிசாவுக்குச் சென்றார். அங்கேயே தனது ஓய்வுக் காலத்தை கழித்து வந்தவர் தனது 64 வயதில் உடல்நலக் குறைவு காரணமாக 12 மார்ச் 2013 அன்று காலமானார்

மேற்கோள்கள்

தொகு
  1. காலமானார் முன்னாள் தலைமைச் செயலாளர் எல். கே. திரிபாதி. தினமணி நாளிதழ். 12 மார்ச் 2013. {{cite book}}: Check date values in: |year= (help)
  2. L.K. Tripathy dead. The Hindu. 12 march 2013. {{cite book}}: Check date values in: |year= (help)
  3. TN Govt appoints new Chief Secy, DGP. The Hindu Business Line. 23 April 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எல்._கே._திரிபாதி&oldid=3855499" இலிருந்து மீள்விக்கப்பட்டது