எளிய திரைநிகழ்வி

எளிய திரைநிகழ்வி / சிம்பிள்சிகிரின்ரெக்கார்டர் (SimpleScreenRecorder) என்பது லினக்சை அடிப்படைக் கொண்டு இயங்கும் கணினிகளுக்காக உருவாக்கப்பட்டது. எனினும், இது பலவித இயக்குதளங்களிலும் செயற்படவல்ல மொழியால் (Qt software) எழுதப்பட்டுள்ளது. வி. எல். சி. ( ffmpeg/avconv, VLC) போன்ற திரைநிகழ்விகளுக்கு மாற்றாக திகழ்கிறது.[1][2]

எளிய திரைநிகழ்வி
வடிவமைப்புMaarten Baert
உருவாக்குனர்Maarten Baert
அண்மை வெளியீடு0.3.8 / நவம்பர் 6, 2016; 8 ஆண்டுகள் முன்னர் (2016-11-06)
இயக்கு முறைமைலினக்சு
மென்பொருள் வகைமைதிரைநிகழ்வி மென்பொருள்
உரிமம்குனூ பொதுமக்கள் உரிமம்
இணையத்தளம்உருவாக்குனரின் இணையம்
இதனை நிறுவும் முறை

இந்த பயன்பாட்டு மென்பொருள், பல்புரியாக்கம்(multithreading) நுட்பத்தைக் கையாண்டு இயங்குவதால், குறைந்த திறனுள்ள கணினிகளிலும், இதன் திறன் சிறப்பாக செயல்படுகிறது. ஒரு பயனரின் விருப்பத்திற்கு ஏற்ப ஒளி, ஒலி அமைப்புகளை கட்டமைத்துக் கொள்ளலாம். தவறான ஒளி, ஒலி தேர்ந்தெடுப்பை, ஒரு பயனர் தேர்ந்தெடுத்தால், அத்தவற்றை இந்த மென்பொருள் இயங்குவதற்கு முன்பேயே சுட்டுகிறது. இதனால் விருப்பத்திற்கு ஏற்ப webm, MP4, MKV வடிவில் திரை நிகழ்வினைப் பெற இயலும். ஒரு நிமிடத்திற்கு ஏறத்தாழ 15-18 மெகாபைட்டுகள் சேமிப்பிடத்தை, தனது கோப்புக்கு எடுத்துக் கொள்கிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Who Needs Fraps on Linux When You Have SimpleScreenRecorder?". பார்க்கப்பட்ட நாள் 29 August 2015.
  2. Lynch, Jim (1 January 2014). "Install SimpleScreenRecorder in Ubuntu 13.10". Archived from the original on 29 ஏப்ரல் 2015. பார்க்கப்பட்ட நாள் 28 August 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=எளிய_திரைநிகழ்வி&oldid=3928242" இலிருந்து மீள்விக்கப்பட்டது