எழுத்துக் களரி

இந்தியாவின் கேரளாவிலுள்ள பழைய பாரம்பரிய கிராமப்புற பள்ளிகள்

எழுத்துக் களரி (Ezhuthu Kalari) என்ற மலையாளச் சொற்றொடர் இந்தியாவின் கேரளாவில் உள்ள பழைய பாரம்பரிய கிராமப்புற பள்ளிகளைக் குறிக்கிறது.[1] இந்த நிறுவனங்களே தொடக்கக் கல்வியைத் தொடங்குவதற்கான முக்கிய மையங்களாகத் திகழ்ந்தன. படித்தல், எழுதுதல், கணக்கிடுதல் போன்ற அடிப்படை அறிவினைப் பெற கடந்த காலத்தில் பெரும்பாலான குழந்தைகள் இந்த மையங்களில் கற்க வேண்டியிருந்தது. எழுத்துப்பள்ளி, ஆசான் களரி, பள்ளிக்கூடம் போன்ற பிற பெயர்களாலும் இது அறியப்பட்டது. எழுத்து களரி என்பது குருகுல பள்ளிக் கல்வியின் பண்டைய மரபுகளிலிருந்து உருவானதாக நம்பப்படுகிறது.[2]. இந்தப் பள்ளிகளின் ஆசிரியர்கள் ஆசான் அல்லது எழுத்து ஆசான் என்ற பெயரால் அழைக்கப்பட்டனர்.[3] எழுதுப்பள்ளி என்பது சிறீ புத்தரின் காலத்தில் பள்ளிகள் என்று பொருள் கொண்டிருந்தது.

மேற்கோள்கள் தொகு

  1. Raja, Dileep.G (2005). "Of an old school of teachers". தி இந்து (Thiruvananthapuram) இம் மூலத்தில் இருந்து 2014-10-15 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20141015115101/http://www.thehindu.com/thehindu/fr/2005/10/07/stories/2005100700420200.htm. 
  2. Kerala District Gazetteers: Quilon ,Kerala (India), A. Sreedhara Menon , page 423
  3. People of India, Volume 27, Part 3 ,Anthropological Survey of India Kumar Suresh Singh, page 1613
"https://ta.wikipedia.org/w/index.php?title=எழுத்துக்_களரி&oldid=3741747" இலிருந்து மீள்விக்கப்பட்டது