எழுமதம் என்பது ஒரு நூலுக்கு இருக்கவேண்டிய ஏழு கொள்கைகள் என்று நன்னூல் குறிப்பிடுகிறது.

  1. பிறர் கொள்கையை உடன்பட்டு ஏற்றல்
  2. அக்கொள்கையில் தவறு கண்டறிந்து மறுத்தல்
  3. முதலில் உடன்பட்டு ஏற்றுக்கொண்டு பின்னர் மறுத்தல்
  4. தான் ஒரு கொள்கையைக் கூறி இறுதிவரை அதை நிலைநாட்டுதல்
  5. இருவர் மாறுபடக்கூறிய கொள்கைகளில் ஏதேனுமொன்றை துணிந்து ஏற்றல்
  6. பிறருடைய நூலிலுள்ள குற்றம் காட்டுதல்
  7. பிறருடைய கொள்கைக்கு உடன்படாமல் தன் கொள்கையையே கொள்ளுதல்

இவ்வேழினையும் ஏழுமதங்களாக நன்னூல் சுட்டுகிறது [1]

அடிக்குறிப்புகள் தொகு

  1. எழுவகை மதமே யுடன்படல் மறுத்தல் பிறர்தம் மதமேற் கொண்டு களைவே தாஅ னாட்டித் தனாது நிறுப்பே இருவர் மாறுகோள் ஒருதலை துணிவே பிறர்நூல் குற்றங் காட்டல் ஏனைப் பிறிதொடு படாஅன் றன்மதங் கொளலே. - நன்னூல் 11

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எழுமதம்&oldid=3236509" இலிருந்து மீள்விக்கப்பட்டது