எவ்ஜெனி போகோசெவ்

எவ்ஜெனி நிகோலாயெவிச் போகோசெவ (Evgeny Nikolayevich Pogozhev) (21 ஏப்ரல் 1870-13 பிப்ரவரி 1931) உருசியாவைச் சேர்ந்த மத எழுத்தாளரும், கட்டுரையாளரும், பத்திரிகையாளரும் ஆவார், எவ்ஜெனி போசெலியானின் என்ற புனைப்பெயரில் நன்கு அறியப்பட்டார்.[1] [2]

எவ்ஜெனி போகோசெவ்
1931 இல் எவ்ஜெனி போகோசெவ், மரணதண்டனைக்கு சில நாட்களுக்கு முன்பு
1931 இல் எவ்ஜெனி போகோசெவ், மரணதண்டனைக்கு சில நாட்களுக்கு முன்பு
பிறப்பு(1870-04-21)21 ஏப்ரல் 1870
மாஸ்கோ, உருசியப் பேரரசு
இறப்பு13 பெப்ரவரி 1931(1931-02-13) (அகவை 60)
சென் பீட்டர்சுபெர்கு, சோவியத் ஒன்றியம்
புனைபெயர்எவ்ஜெனி போசெலியானின்
தொழில்எழுத்தாளர்
தேசியம்உருசியர்
குடியுரிமைஉருசியப் பேரரசுசோவியத் ஒன்றியம்
கருப்பொருள்கிறிஸ்தவம் • உருசிய மரபுவழி • உருசிய வரலாறு

தூக்கிலிடுதல் தொகு

1924 ஆம் ஆண்டில், போகோசெவ், சென் பீட்டர்சுபெர்குவில் ஒரு முடியாட்சி அமைப்பை நிறுவியதாக குற்றம் சாட்டப்பட்டு சைபீரியாவில் உள்ள அங்கார்ஸ்க் பகுதிக்கு நாடு கடத்தப்பட்டார். அங்கு இவர் இரண்டு ஆண்டுகள் கழித்தார். 1930 இன் பிற்பகுதியில், சோவியத் ஒன்றியத்தில் உருசிய மரபுவழித் திருச்சபையின் துன்புறுத்தல் அதன் உச்சத்தை எட்டியபோது, எவ்ஜெனி போகோசெவ் கைது செய்யப்பட்டு பிப்ரவரி 13, 1931 அன்று தூக்கிலிடப்பட்டார். 1990 களில் இவரது முக்கிய படைப்புகள் மீண்டும் வெளியிடப்பட்டன, சமீபத்திய ஆண்டுகளில் உருசிய மரபுவழித் திருச்சபை சமூகத்தில் இவர் மீதான ஆர்வம் கணிசமாக அதிகரித்துள்ளது.[2]

மேற்கோள்கள் தொகு

  1. Antonov, V. "Поселянин / Погожев Евгений Николаевич". The Great Encyclopedia of Russian People /Большая энциклопедия русского народа. Archived from the original on 1 July 2012. பார்க்கப்பட்ட நாள் 2010-08-13.
  2. 2.0 2.1 "Житие мученика Е. Н. Погожева (Поселянина) / The Life of E. N. Pogozhev (Poselyanin), a Russian Martyr". www.pravoslavie.ru. Archived from the original on 1 July 2012. பார்க்கப்பட்ட நாள் 2010-08-13.

குறிப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எவ்ஜெனி_போகோசெவ்&oldid=3711534" இலிருந்து மீள்விக்கப்பட்டது