எஸ்தர் விக்டோரியா ஆபிரகாம்

எஸ்தர் விக்டோரியா ஆபிரகாம் (30 டிசம்பர் 1916 - 6 ஆகஸ்ட் 2006) பிரமிளா என்ற புனைப்பெயரால் பெயரால் திரைப்படங்களில் நன்கு அறியப்பட்டவர்.பாரம்பரிய நடனக் கலைஞர், இந்திய தோற்ற மங்கை, நடிகையும் மற்றும் இந்தி திரைப்படத் துறையில் முதல் பெண் திரைப்படத் தயாரிப்பாளரும் ஆவார். 1947 இல் முதல் மிஸ் இந்தியா போட்டியை வென்றதற்காகவும் அவர் நன்கு அறியப்பட்டவர்.

பிரமிளா
பிறப்புஎஸ்தர் விக்டோரியா ஆபிரகாம்
30 திசம்பர் 1916
கொல்கத்தா, வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு6 ஆகத்து 2006(2006-08-06) (அகவை 89)
மும்பை, மகாராஷ்டிரம், இந்தியா
தேசியம்இந்தியா
மற்ற பெயர்கள்பிரமிளா
பணி
  • விளம்பர மாதிரி
  • நடிகை
பிள்ளைகள்ஹைதர் அலி (நடிகர்)
பிரமிளா 1936 ஆம் ஆண்டு ஹமாரி பெட்டியா திரைப்படத்தில்.

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

பிரமிளா 1916 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் ஒரு பாக்தாதி யூத குடும்பத்தில் பிறந்தார் .[1][2] கொல்கத்தாவைச் சேர்ந்த தொழிலதிபர் ரூபன் ஆபிரகாம் மற்றும் கராச்சியைச் சேர்ந்த மாடில்டா ஐசக் ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். லியா என்ற பெண்மணியை முதலாவதாக அவரது தந்தை திருமணம் செய்து கொண்டார்.இவா்கள் மூலம் மூன்று உடன்பிறந்தவா்களும், இரண்டதவதாகத் திருமணம் செய்த தனது தாய் மாடில்டா ஐசக் மூலம் ஆறு உடன்பிறந்தவா்களும் உள்ளனா்...

எஸ்தர் விக்டோரியா ஆபிரகாம் இரண்டு முறை திருமணம் செய்து கொண்டார். முதல் திருமணத்திலிருந்து ஒரு குழந்தை பிறந்தது. அவர் மீண்டும் குமார் என்று நன்கு அறியப்பட்ட சக நடிகர் சையத் ஹசன் அலி ஜைதியைத் திருமணம் செய்துகொண்ட பிறகு நான்கு குழந்தைகள் பிறந்தனர். ஷியா முஸ்லீமான ஜைதி முகல்-இ -அசாம் மற்றும் ஸ்ரீ 420 போன்ற திரைப்படங்களில் தோன்றினார். ஜைதிக்கு எஸ்தர் விக்டோரியா ஆபிரகாம் இரண்டாவது மனைவி ஆவார்.[3] குமார் 1963 இல் பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்த பிறகு, எஸ்தர் விக்டோரியா ஆபிரகாம் இந்தியாவில் தங்க முடிவு செய்து திலைப்படங்களில் நடித்தும் திரைப்படங்களை தயாரித்தும் வந்தார். .

அவரது இளைய மகன் ஹைதர் அலி திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சிகளிலும் தோன்றி நடிப்புத் தொழிலைத் தொடர்ந்தார். அவரது மகள் நக்கி ஜஹான், 1967 ஆம் ஆண்டில் ஈவ்'ஸ் வீக்லி மிஸ் இந்தியா என முடிசூட்டப்பட்ட்டு ஆஸ்திரேலியாவில் நடந்த பசிபிக் குவெஸ்ட் அழகு போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.[4] மிஸ் இந்தியா பட்டத்தை வென்ற ஒரே தாய்-மகள் இவா்கள் மட்டுமே ஆவா்.

எஸ்தர் விக்டோரியா ஆபிரகாம் 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 அன்று இறந்தார்.[5]

கலைத் தொழில்

தொகு

1947 ஆம் ஆண்டு தனது 31 வது வயதில் முதல் மிஸ் இந்தியா போட்டியின் வெற்றியாளராக பிரமிளா இருந்தார்.[6][7][8] பொழுதுபோக்கு துறையில் அவரது முதல் பயணம் ஒரு பார்சி நாடக நிறுவனத்தில் நடனக் கலைஞராக இருந்து 15 நிமிட இடைவேளை நேரங்களில் நடனமாடினார்

பிரமிளா பல்திறம் வாய்நத நபராக இருந்தார். ஒரு சிறந்த நடிகராகவும் திரைப்பட தயாரிப்பாளராகவும் மட்டும் அல்லாமல் , கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பட்டதாரியும் ஆவார், திறமையான ஆசிரியராக [9] பெரும்பாலும் தனது சொந்த திரைப்படங்களில் உடைகள் மற்றும் நகைகளையும் தானே வடிவமைத்தார்.

திரைப்படவியல்

தொகு

ஆர்.எஸ். சவுத்ரி (1935) இயக்கிய ரிடர்ன் டூ த டூஃபான்

பிகாரன், பி.கே.அதார்த்தி இயக்கியுள்ளார் (1935)

மகாமாயா, குஞ்சால் இயக்கியது (1936)

ஆர்.எஸ். சவுத்ரி இயக்கிய ஹமாரி பெட்டியா / எங்கள் செல்ல மகள்கள் (1936)

சரியா, சாந்தி டேவ் இயக்கியுள்ளார் (1936)

குஞ்சால் (1937) இயக்கிய மேரே லாய்

குஞ்சால் இயக்கிய தாய் இந்தியா (1938)

பிஜ்லீ, பல்வந்த் பட் இயக்கியது (1939)

சாந்தி தவே இயக்கிய ஹுகும் ஹா எக்கா (1939)

ஜங்கிள் கிங், நாரி கடியல்லி இயக்கியது (1939)

எஸ்.எம். யூசுப் இயக்கிய கஹான் ஹை மன்ஸில் டென் (1939)

சர்தார், துவாரகா கோஸ்லா இயக்கிய (1940)காஞ்சன், லீலா சிட்னிஸ் இயக்கியுள்ளார் (1941)

ஷாஜாதி, ஜே.பி. அத்வானி இயக்கியுள்ளார் (1941)

பசந்த் இயக்கியவர் அமியா சக்ரவர்த்தி (1942)

ஜங்கர், எஸ்.கலீல் இயக்கியுள்ளார் (1942)

சஹேலி, எஸ்.எம். யூசுப் இயக்கியுள்ளார் (1942)

அல்டி கங்கா, கே. தைபர் இயக்கியது (1942)

பி.டி.வேடி இயக்கிய படே நவாப் சாஹேப் (1944)

நசீப், பி.டி.வேதி இயக்கியுள்ளார் (1945)

தேவர், எஸ்.எம். யூசுப் இயக்கியுள்ளார் (1946)

எஸ்.எம். யூசுப் இயக்கிய நெஹ்லே பெ டெஹ்லா (1946)

சால் கிரா, கே.எஸ். தரியானி இயக்கியுள்ளார் (1946)

ஷாலிமார், ரூப் கே. ஷோரி இயக்கியது (1946)

ராம் தரியானி இயக்கிய தூஸ்ரி ஷாடி (1947)

எம்.குமார் இயக்கிய ஆப் பீட்டி (1948)

கே.அமாமத் இயக்கிய பெகாசூர் (1950)

ஷோப்னா சமர்த் இயக்கிய ஹமாரி பேட்டி (1950)

தூன், எம்.குமார் இயக்கியது (1953)

ராம் தரியானி இயக்கிய மஜ்பூரி / சோட்டி பஹேன் (1954)

மொரிஸ் ஆபிரகாம் இயக்கிய படால் அவுர் பிஜ்லீ (1956)

பைட்டிங் குயின் (1956) நைர் கதியாலி இயக்கிய

ஜங்கிள் கிங், இயக்கியவர் மசூத் (1959)

எம்.குமார் இயக்கிய பஹானா (1960)

முராத், நரி கடியாலி இயக்கியுள்ளார் (1961)

தாங், அமோல் பலேகர் (2006) இயக்கியது

மேற்கோள்கள்

தொகு
  1. "Jewish stars of Bollywood". பார்க்கப்பட்ட நாள் 3 September 2014.
  2. "Meet Pramila, the first Miss India". பார்க்கப்பட்ட நாள் 3 September 2014.
  3. Pramila: Esther Victoria Abraham – A Star Studded Bollywood and Glamour Family in India பரணிடப்பட்டது 2018-10-04 at the வந்தவழி இயந்திரம். Jewish Calcutta
  4. "History of India's Jewish beauty queens". YNet
  5. Pramila – The first Miss India
  6. "Pramila - Esther Victoria Abraham - PramilaFirst Miss India 1947 - A Tribute - Pictures". Zimbio. பார்க்கப்பட்ட நாள் 10 February 2011.
  7. "Mama Hindustani". Outlook. 20 Oct 1997.
  8. Pramila, Esther Victoria Abraham-A biography.
  9. [1]