யெஸ்ப்பூ

(எஸ்ப்பூ இலிருந்து வழிமாற்றப்பட்டது)

யெஸ்ப்பூ அல்லது எஸ்ப்பூ (Espoo), பின்லாந்தின் தெற்குக் கடற்கரை நகராகும். பின்லாந்தின் இரண்டாவது பெரிய நகரமும் இதுவே. இது ஹெல்சின்கி பெருநகரின் ஒரு பகுதி ஆகும். யெஸ்ப்பூவின் மொத்தப் பரப்பளவு 528 கிமீ² ஆகும், இதில் 312 கிமீ² நிலப்பரப்பாகும். தற்போதய மக்கட்தொகை சுமார் 234,466 (31 அக்டோபர் 2006 இன் படி), இது பின்லாந்தில் ஹெல்சின்கியை அடுத்து அதிக மக்கட்தொகை உள்ள நகராகும். நெஸ்டி ஆயில் நிறுவனத்தின் தலைமையகம் இங்குள்ளது.

யெஸ்ப்பூ நகரம்
Location of யெஸ்ப்பூ நகரம்
நாடுபின்லாந்து
மாநிலம்தெற்கு பின்லாந்து
மக்கள்தொகை
 (2006)
 • மொத்தம்2,34,466
சின்னம்
சின்னம்

இங்கு வாழும் மக்கள் பின்லாந்தின் இரு ஆட்சிமொழிகளைப் பேசுகின்றனர். பெரும்பான்மையினர் பின்னிய மொழியைத் தாய்மொழியாகவும், சிறுபான்மையினர் சுவீடிய மொழியைத் தாய்மொழியாகவும் பேசுகின்றனர். கால்பந்தாட்டம் முக்கிய விளையாட்டாகும். தேசியப் பூங்கா ஒன்றும் இங்கு அமைந்துள்ளது.

நிறுவனங்கள்

தொகு


வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=யெஸ்ப்பூ&oldid=3418257" இலிருந்து மீள்விக்கப்பட்டது