எஸ். ஆர். எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரி

எஸ்.ஆர்.எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரி (SRM Valliammai Engineering College) என்பது தமிழ்நாட்டின் காட்டங்குளத்தூரில் அமைந்துள்ள ஒரு தன்னாட்சி பொறியியல் கல்வி நிறுவனம் ஆகும். இக்கல்லூரி அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைவுக்கல்லூரிகளில் ஒன்றாகும்.[1] இது 1999 செப்டம்பர் 9 இல் நிறுவப்பட்டது. இது 29,000 சதுர மீட்டர் பரப்பளவில் பத்து மாடி கட்டட வளாகத்தில் செயல்படுகிறது. எஸ்.ஆர்.எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரி, எஸ். ஆர். எம் கல்விக்குழுமத்தில் உள்ள ஒரு நிறுவனமாகும். இது வள்ளியம்மை சங்கத்தால் நடத்தப்படுகிறது. வள்ளியம்மை சங்கமானது கல்வியாளர் டாக்டர் தா. இரா. பாரிவேந்தரால் அவரது தாயார் வள்ளியம்மை பெயரால் நிறுவப்பட்டது. இக்கல்லூரியானது டியுவி ரைன்லாண்டிலிருந்து ஐஎஸ்ஓ 9001: 2015 சான்றிதழ் பெற்றது.

எஸ்.ஆர்.எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரி
வகைபொறியியல் கல்லூரி
உருவாக்கம்9 செப்டம்பர் 1999
நிறுவுனர்தா. இரா. பாரிவேந்தர்
தலைவர்ரவி பச்சமுத்து
முதல்வர்முனைவர் பா. சிதம்பர ராஜன்
கல்வி பணியாளர்
300
நிருவாகப் பணியாளர்
173
மாணவர்கள்~4200
பட்ட மாணவர்கள்~3960
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்~324
அமைவிடம், ,
12°49′33″N 80°02′34″E / 12.825752°N 80.042833°E / 12.825752; 80.042833
வளாகம்காட்டாங்குளத்தூரில், பொத்தேரி,55 ஏக்கர்கள் (0.2 km2)
சுருக்கப் பெயர்SRM VEC
சேர்ப்புஅண்ணா பல்கலைக்கழகம்
இணையதளம்www.srmvalliammai.ac.in

வளாகத்தின் அமைவிடம்

தொகு

இந்த கல்லூரி தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு இடையே தே.நெ 45 ஐ ஒட்டி அமைந்துள்ளது. இது சென்னையின் காட்டங்குளத்தூர், எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தை ஒட்டிய வளாகமாகும்.

நிருவாகம்

தொகு

இந்த கல்லூரியின் தலைவராக திரு.ரவி பச்சமுத்து அவர்களும், தலைவராக திரு. பி. சத்தியநாராயணன் அவர்களும், தாளாளராக திருமதி பத்மபிரியா அவர்களும்,முதல்வராக முனைவர் பா. சிதம்பர ராஜனும், துணை முதல்வராக முனைவர் மா. முருகனும் இருந்து நிருவகிக்கின்றனர். நிறுவனர் மற்றும் தலைவரான முனைவர் தா. இரா. பாரிவேந்தர் இவர்களுக்கு வழிகாட்டியாக உள்ளார்.

மேலாண்மை மற்றும் பாடப்பிரிவுகள்

தொகு

இக்கல்லூரி வளாகமானது 27.5 ஏக்கர்கள் (111,000 m2) பரப்பளவில் நிறுவப்பட்டுள்ளது 256 சதுர மீட்டரில் வகுப்பறைகள், 5061 சதுர மீட்டர் பரப்பளவில் 50 ஆய்வகங்கள் போன்றவற்றுடன் உள்ளது. மேலும் முழுமையாக நவீனமயமாக்கப்பட்ட உபகரணங்கள் மற்றும் சுமார் 1300 கணினிகள் மூலமாக மூலம் தற்போதைய வேலைத் தேவைகளுக்கு பயிற்சி அளிக்கக் கூடியதாக உள்ளது.

இங்கு இளநிலை பொறியியல் படிப்புகளாக மின்னணுவியல் தொடர்பியல் பொறியியல் , கணினி அறிவியல் பொறியியல், மின்னியல் மற்றும் மின்னணுவியல் பொறியியல் , மின்னணு மற்றும் கருவியியல் பொறியியல், தகவல் தொழில்நுட்பம், இயந்திரப் பொறியியல், குடிசார் பொறியியல்,இணைய பாதுகாப்பு, வேளாண்மை பொறியியல், மருத்துவ மின்னணுவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் பட்டப்படிப்புகள் வழங்கப்படுகிறது.

மேலும் முதுநிலை பொறியியல் படிப்புகளாக எம்.இ-கணினி அறிவியல் மற்றும் பொறியியல், எம்இ - ஆற்றல் அமைப்பு பொறியியல், எம்.இ - கட்டமைப்புப் பொறியியல், எம்.இ - தொழில் பாதுகாப்பு பொறியியல்,எம்.இ- தகவல் தொடர் அமைப்பு,எம்.டெக்-தரவு அறிவியல்,எம்.இ-கட்டுப்பாடு மற்றும் அளவுக் கருவியியல் பொறியியல் மற்றும் முதுநிலை வணிக மேலாண்மை (எம்பிஏ) ஆகிய படிப்புகள் வழங்கப்படுகின்றன.

ஆண்டுக்கு புதிதாக 324 மாணவர்களை சேர்த்துக் கொள்ளக்ககூடியதாக, சுமார் 300 ஆசிரியர் போன்ற ஊழியர்களைக் கொண்டதாக உள்ள இக்கல்லூரியியல், சுமார் 4200 மாணவர்கள் பயில்கின்றனர்.

சான்றுகள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு