எஸ். என். சோமையாஜுலு

இந்திய விடுதலைப் போராட்ட வீரர்

எஸ். என். சோமையாஜுலு (1902-1990) ஒரு தமிழக அரசியல்வாதி, இந்திய விடுதலைப்போராட்ட வீரர், மற்றும் சமூக சேவகர்.இவர் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு 1952ல் திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரசு சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

வாழ்க்கை சுருக்கம்தொகு

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகில் உள்ள ஆத்தூர் கிராமம் இவரது சொந்த ஊர். இவரது தந்தையார் பெயர் சோமசுந்தரம்,தாய் சீதையம்மாள். இவர் இளம்பருவத்தில் இந்திய விடுதலைப்போராராட்டத்தில் தீவிர பங்குகொண்டதால், தாமதமாக திருமணம் (42 வது வயதில்) செய்துகொண்ட இவருக்கு 6 குழந்தைகள் (2-ஆண் , 4-பெண்)

அரசியல்பங்குதொகு

  • 1927 மதுரையில் ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டம்.
  • 1927 சென்னையில் நீல் சிலையை அகற்ற போராட்டம்.
  • 1931 கோவில்பட்டியில் கள்ளுக்கடை மறியல் போராட்டம்.

ஆகிய போராட்டங்களில் தீவிர பங்கு கொண்டு சிறைசென்றார். மேலும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபாடு உடையவர் மற்றும் எழுத்தாளரும் ஆவார்.

மேற்கோள்கள்தொகு

இவற்றையும்காண்கதொகு

வெளி இணைப்புதொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._என்._சோமையாஜுலு&oldid=2760583" இருந்து மீள்விக்கப்பட்டது