எஸ். எஸ். சரவணன்

எஸ். எஸ். சரவணன், (15 செப்டம்பர் 1975) 2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் மதுரை தெற்கு சட்டமன்றத் தொகுதிலிருந்து 23,736 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு, உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[1][1][2]

எஸ். எஸ். சரவணன்
மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர்
தனிநபர் தகவல்
பிறப்பு 15 செப்டம்பர் 1975
மதுரை
அரசியல் கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
வாழ்க்கை துணைவர்(கள்) ஆஷா
பிள்ளைகள் கமலிகா
நிரோஷினி
அபிலயா
அகிலயா
இருப்பிடம் மதுரை, தமிழ்நாடு, இந்தியா
பணி கட்டுமானம் & சமூகப்பணி
சமயம் இந்து

கல்வி தொகு

எஸ். பி. சுப்பிரமணியன் - இந்துமதி இணையருக்குப் பிறந்த சரவணன், பள்ளிக் கல்வியை மதுரை சௌராட்டிர மேனிலைப் பள்ளியிலும், கட்டிட பொறியியல் இளநிலை பட்டப்படிப்பை, திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியிலும், கட்டமைப்பு பொறியியலில் முதுநிலைப் பட்டப்படிப்பை தஞ்சாவூர் பொன்னையா இராமஜெயம் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியிலும் பயின்றவர்.

தொழில் தொகு

முதுநிலை கட்டமைப்பு பொறியியலாளரான இவர் சூழிலியல் - தொழில்நுட்ப கட்டுமான (Enviro- Tec Construction) நிறுவனத்தை மதுரையில் நடத்தி வருகிறார்.

வரலாறு தொகு

இவரது தாய் வழி பாட்டனார் கே. எஸ். ராமகிருஷ்ணன், மதுரை நகராட்சி மன்றத் தலைவராக 1967 முதல் 1971 முடிய பணியாற்றியவர். பின்னர் 1971இல் மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். [3]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 SARAVANAN S S
  2. "Maurai South Legislative Assembly" இம் மூலத்தில் இருந்து 2017-08-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170810001603/http://www.madurai.tn.nic.in/mla.html#5. 
  3. Madurai East (State Assembly Constituency)
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._எஸ்._சரவணன்&oldid=3546307" இருந்து மீள்விக்கப்பட்டது