எஸ். எஸ். மணி நாடார்

எஸ்.எஸ்.மணி நாடார் (06 சூலை 1938-09 நவம்பர் 2002) இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் தூத்துக்குடி மாவட்டம் கடம்போடு வளைவினைச் சார்ந்தவர். இவர் 1996 மற்றும் 2001ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தல்களில் சாத்தான்குளம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தமிழ் மாநில காங்கிரசு (மூப்பனார்) கட்சி சார்பாக தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

நாடார் இந்திய குடியரசுக் கட்சியின் உறுப்பினராக இருந்தவர். தமிழ் மாநில காங்கிரஸ்சு கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து சட்டமன்ற உறுப்பினர்களில் இவரும் ஒருவர். ஆனால் ஆகத்து 2002-ல் இந்திய தேசிய காங்கிரசுடன் கட்சி முன்மொழியப்பட்ட இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.[2]

இவர் நவம்பர் 9, 2002-ல், 66 வயதில் ஒரு மனைவி மற்றும் மகனை விட்டு சென்னையில் இறந்தார்.[3]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._எஸ்._மணி_நாடார்&oldid=3546309" இருந்து மீள்விக்கப்பட்டது