எஸ். ஏ. சின்னராசு

எஸ். ஏ. சின்னராசு (C.V.M. Annamalai)(பிறப்பு அக்டோபர் 15, 1948) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு மேனாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் தர்மபுரி மாவட்டம் அரூரைச் சார்ந்தவர். சேலம் நகராட்சிப் பள்ளியில் படித்த இவர், சென்னை பச்சையப்பா கல்லூரியிலும் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியிலும் கல்லூரி படிப்பினை பயின்றுள்ளார். மருத்துவரான இவர், மருத்துவத் துறையில் 7 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். சின்னராசு,திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர் ஆவார். சின்னராசு 1971ஆம் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக வேட்பாளராக அரூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர் ஆனார்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. தமிழ்நாடு சட்டப் பேரவை ”யார் எவர்” [Tamil Nadu Legislative Assembly "Who's Who"]. 01.01.1972: Tamil Nadu Legislative Assembly Department. 1971. பக். 452. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._ஏ._சின்னராசு&oldid=3450332" இலிருந்து மீள்விக்கப்பட்டது