எஸ். ஓ. கனகரத்தினம்

சின்னக்குட்டி உடையார் கனகரத்தினம் (Sinnakutty Odayar Canagaratnam, 1880 – மே 1938) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், இலங்கை அரசாங்க சபை உறுப்பினரும் ஆவார்.

எஸ். ஓ. கனகரத்தினம்
S. O. Canagaratnam
மட்டக்களப்பு தெற்குத் தொகுதிக்கான இலங்கை அரசாங்க சபை உறுப்பினர்
பதவியில்
1936–1938
முன்னவர் ஏ. எச். மாக்கான் மாக்கார்
பின்வந்தவர் எஸ். தர்மரத்தினம்
தனிநபர் தகவல்
பிறப்பு 1880
இறப்பு மே 1938(1938-05-00) (அகவை 57–58)
தேசியம் இலங்கைத் தமிழர்
பணி அரசுப் பணி
தொழில் முதலியார்

வாழ்க்கைக் குறிப்புதொகு

கனகரத்தினம் 1880 இல் இலங்கையின் தென்கிழக்கே காரைதீவு என்ற ஊரில் சின்னக்குட்டி உடையார் என்பவருக்குப் பிறந்தார்.[1] இவர் மட்டக்களப்பு புனித அன்ட்ரூசு ஆங்கிலப் பள்ளியில் கல்வி கற்றார்.[1]

கனகரத்தினம் ஜே. ஆபிரகாம் என்பவரின் மகளான முத்தம்மா என்பவரைத் திருமணம் புரிந்தார்.[1] இவர்களுக்கு நான்கு பெண் பிள்ளைகள் உள்ளனர்[1] 1938 மே மாதத்தில் இவர் காலமானார்.[1][2]

பணிதொகு

கனகரத்தினம் இலங்கை எழுதுவினைஞர் சேவையில் இணைந்து பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான உதவி நிதியாளராகவும், அதனைத் தொடர்ந்து கிழக்கு மாகாணத்திற்கான முதலியாராகவும் பணி உயர்வு பெற்றார்.[1] அரசுப் பணியில் இருந்து இளைப்பாறிய பின்னர்1936 அரசாங்க சபைத் தேர்தலில் மட்டக்களப்பு தெற்குத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று இலங்கை அரசாங்க சபைக்கு சென்றார்.[1][2][3]

தேர்தல் தகவல்தொகு

தேர்தல் தொகுதி கட்சி வாக்குகள் முடிவுகள்
1936 இலங்கை அரசாங்க சபைத் தேர்தல் மட்டக்களப்பு தெற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்

எழுதிய நூல்கள்தொகு

  • Monograph of the Batticaloa District of the Eastern Province, Ceylon, 1921[1]

மேற்கோள்கள்தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 எஸ். ஆறுமுகம் (1997). Dictionary of Biography of the Tamils of Ceylon. பக். 28-29. http://noolaham.net/project/19/1810/1810.pdf. 
  2. 2.0 2.1 Rajasingham, K. T.. "Chapter 8: Pan Sinhalese board of ministers - A Sinhalese ploy". Sri Lanka: The Untold Story. Archived from the original on 2001-12-24. https://web.archive.org/web/20011224000734/http://www.atimes.com/ind-pak/CI29Df03.html. பார்த்த நாள்: 2017-02-08. 
  3. "Veeramunai's perpetual fear". தமிழ்நெட். 04-02-1998. 8-02-2017 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |accessdate=, |date= (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._ஓ._கனகரத்தினம்&oldid=3236567" இருந்து மீள்விக்கப்பட்டது