எஸ். குமரன்

இந்திய அரசியல்வாதி

எஸ்.குமரன் (S. Kumaran) (25 பிப்ரவரி 1923 - 24 திசம்பர் 1991) ஒரு புன்னப்பரா -வயலார் போராட்டத்தில் கலந்து கொண்ட சுதந்திரப் போராட்ட வீரராவார். மேலும், இவர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சித் தலைவரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும், மராரிகுளம் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினருமாவார்.[1] [2]

எஸ். குமரன்
இந்தியாவின் மாநிலங்களவை உறுப்பினர்
பதவியில்
1970–1976
பதவியில்
1976–1982
தொகுதி கேரளம்
இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் கேரள மாநிலச் செயலாளர்
பதவியில்
1968–1970
முன்னவர் செ. அச்சுத மேனன்
பின்வந்தவர் என். ஈ. பலராம்
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1960–1964
முன்னவர் சதாசிவன் சி.ஜி
பின்வந்தவர் எஸ். தாமோதரன்
தொகுதி மராரிகுளம்
தனிநபர் தகவல்
பிறப்பு February 25, 1923
இறப்பு 24 திசம்பர் 1991(1991-12-24) (அகவை 68)
தேசியம்  இந்தியா
அரசியல் கட்சி இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) சாந்தம்பிகா தேவி
பிள்ளைகள் 1 மகன், 2 மகள்கள்

சுயசரிதை தொகு

இவர், 1923 இல் ஆலப்புழா ஆர்யாட்டில் உள்ள கொச்சுத்தகடியில் வீட்டில் கிட்டச்சன் - கொச்சுபாருவின் மகனாகப் பிறந்தார். இவர் தேங்கார் நார் தொழிற்சாலை தொழிலாளர்களை ஒழுங்கமைத்து அரசியலில் நுழைந்தார். தேசிய சுதந்திரப் போராட்டத்தில், குறிப்பாக புன்னப்பரா-வயலார் போராட்டத்தில் பங்கேற்றார். சுதந்திரப் போராட்ட வீரரும் பொதுவுடைமைக் கட்சித் தலைவருமான மராரிகுளம் முன்னாள்சட்டமன்ற உறுப்பினர் மறைந்த எஸ்.தாமோதரன் இவரது சகோதரராவார்.

அரசியல் செயல்பாடு தொகு

  • மாநில காங்கிரசின் பிராந்திய நடவடிக்கையில் தொடங்கி வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் ஒரு பகுதியாக இருந்தார்.[3]
  • 1938இல் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியில் சேர்ந்தார்
  • 1946இல் கட்சியின் மாநிலக் குழுவில் சேர்ந்தார்.
  • 1966 இல், கட்சியின் மாநிலச் செயலாளரானார்.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._குமரன்&oldid=3546328" இருந்து மீள்விக்கப்பட்டது