எஸ். கே. பி. பொறியியல் கல்லூரி
எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரி (SKP Engineering College) என்பது தமிழ்நாட்டின், திருவண்ணாமலை, சின்னகாங்கியனூரில் உள்ள பொறியியல் கல்லூரி ஆகும். திருவண்ணாமலை மற்றும் அதைச் சுற்றிவாழும் கிராமப்புற மக்களுக்கு தொழில்நுட்ப கல்வி வழங்கும் நோக்குடன் 1999 ஆம் ஆண்டு இக்கல்லூரி நிறுவப்பட்டது. [1] [2]
எஸ் கே பி பொறியியல் கல்லூரி | |
குறிக்கோளுரை | Knowledge is Power |
---|---|
வகை | தனியார் சுயநிதி |
உருவாக்கம் | 1999 |
சார்பு | அண்ணா பல்கலைக்கழகம் |
தலைவர் | கே. கருணாநிதி |
முதல்வர் | முனைவர் வி. சுப்பிரமணிய பாரதி |
பணிப்பாளர் | சி. குமார் (கல்வியாளர்) முனைவர் எம். சந்திரசேகர் (ஆய்வு மற்றும் வளர்ச்சியின் இயக்குநர்) பேரா எட்வர்ட் அந்தோணி (பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புக்கான இயக்குநர்) |
அமைவிடம் | , , 12°13′12″N 79°4′12″E / 12.22000°N 79.07000°E |
வளாகம் | 35 ஏக்கர்கள் (0.14 km2) |
சுருக்கப் பெயர் | SKPEC |
சேர்ப்பு | அண்ணா பல்கலைக்கழகம் |
இணையதளம் | www.skpec.in/ |
எஸ்.கே.பி பொறியியல் கல்லூரியானது ஒரு சுய நிதிக் கல்லூரி ஆகும். இது ஸ்ரீ எஸ். குப்புசாமி நினைவு கல்வி அறக்கட்டளையால் நடத்தப்படுகிறது . இந்த கல்லூரிக்கு புது தில்லியின் ஏ.ஐ.சி.டி.இ ஒப்புதல் அளித்துள்ளது. இது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இக்கல்லூரி முதலில் 240 மாணவர்களுடன் பி.இ / பி.டெக் படிப்புகளை வழங்கத் தொடங்கியது. இப்போது ஏழு பி.இ / பி.டெக் பாடங்கள் மற்றும் ஏழு முதுநிலை படிப்புகளும் வழங்கிவருகிறது. இக்கல்லூரியானது ஆண்டுக்கு 810 மாணவர் சேர்க்கைகான அங்கீகரிகாரம் பெற்றுள்ளது. [3]
படிப்புகள்
தொகுஎஸ்.கே.பி பொறியியல் கல்லூரியானது மாணவர்களுக்கு பல்வேறு பொறியியல் படிப்புகளை கற்பிப்பதை நோக்கமாகக் கொண்டு பல்வேறு படிப்புகளை வழங்குகிறது. இங்கு வழங்கப்படும் படிப்புகள் பின்வருமாறு:
- பி.இ. மின்னணுவியல் மற்றும் தொடர்பு பொறியியல்
- பி.இ. கணினி அறிவியல் மற்றும் பொறியியல்
- பி.டெக் தகவல் தொழில்நுட்பம்
- பி.இ.மின் மற்றும் மின்னணு பொறியியல்
- பி.இ. இயந்திரப் பொறியியல்
- பி.இ. குடிசார் பொறியியல்
- பி.இ. வான்வெளிப் பொறியியல்
- பி.இ. அப்ளைடு எலக்ட்ரானிக்ஸ்
- எம்.இ. கணினி அறிவியல்
- எம்.இ. பேரளவு ஒருங்கிணைச் சுற்று வடிவமைப்பு
- எம்.இ. உட்பொதிக்கப்பட்ட கணினி வடிவமைப்பு
- எம்.இ. ஆற்றல் அமைப்பு பொறியியல்
- எம்.இ. பொறியியல் வடிவமைப்பு
- எம்பிஏ- முதுநிலை வணிக மேலாண்மை
குறிப்புகள்
தொகு- ↑ "S.K.P. Engineering College, Tiruvannamalai, Tiruvannamalai - location map / route map of Institute of Technology / Engineering College College Tamilnadu". Collegesintamilnadu.com. Archived from the original on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2012-05-23.
- ↑ "Archived copy". Archived from the original on 2016-08-20. பார்க்கப்பட்ட நாள் 2016-06-06.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "About SKPEC". SKP Engineering College. Archived from the original on 25 June 2013. பார்க்கப்பட்ட நாள் 8 August 2013.