எஸ். பி. ஓஸ்வால்

எஸ்.பி. ஓஸ்வால் (S. P. Oswal) இவர் ஒரு இந்திய தொழிலதிபரும் மற்றும் வர்த்மான் குழுமங்களின் தற்போதைய தலைவருமாவார்.[1] வர்த்தக மற்றும் கைத்தொழில் துறைகளில் இவர் செய்த சேவைகளுக்காக இந்திய அரசு 2010 ல் இவருக்கு மூன்றாவது மிக உயர்ந்த குடிமக்கள் விருதான பத்ம பூசண் விருது வழங்கி கௌரவித்தது.[2]

வாழ்க்கை

தொகு

எஸ். பி. ஓஸ்வால் 1942 இல் பஞ்சாபில் பிறந்தார். இவர் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் வணிகத்தில் முதுகலை பட்டதாரி பெற்றுள்ளார். இவர் அதில் தங்கப்பதக்கத்துடன் தேர்ச்சி பெற்றார். எண்பதுகளில், ஓஸ்வால் தனது குடும்பத்தின் வணிகக் குழுவான வர்த்மான் குழும நிறுவனத்தில் சேர்ந்தார். இவர் தற்போது அக்குழுவின் தலைவராக உள்ளார்.[3]

எஸ். பி. ஓஸ்வால் வட இந்தியாவில் சுழல் தொழிலை வலுப்படுத்த பங்களித்ததாக கூறப்படுகிறது.[4] 1983 ஆம் ஆண்டில் லூதியானா பங்குச் சந்தையை நிறுவியதன் பின்னணியில் இவர் இருந்ததாக் கருதப்படுகிறார். வர்த்மான் குழுமத்தை இந்திய வணிக சூழலில் முக்கியத்துவம் வாய்ந்த நிலைக்கு இட்டுச் சென்றதைத் தவிர, சமூக ரீதியாக பொருத்தமான பல முயற்சிகளிலும் ஓஸ்வால் ஈடுபட்டுள்ளார்.

ஓஸ்வால் சாகுன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியருக்கு சுசிதா என்ற ஒரு மகள் இருக்கிறார். சுசிதாவின் கணவர் சச்சித் ஜெயின் என்பவரும் வர்த்மான் குழுமத்தின் நிர்வாக இயக்குநராக உள்ளார்.[5]

கிராம தத்தெடுப்பு திட்டம்

தொகு

பயிர்கள் பேரழிவு மற்றும் பருத்தி வயல்கள் சுருங்குவதால் பஞ்சாப் மாநிலம் 2001 ஆம் ஆண்டில் பருத்தி விளைச்சலில் திடீர் வீழ்ச்சியைக் கண்டது. எஸ். பி. ஓஸ்வால், பருத்தி விளைச்சலை விரும்பத்தக்க நிலைக்குக் கொண்டுவருவதற்கான ஒரு நடவடிக்கையாக, கிராம தத்தெடுப்புக்கான ஒரு முயற்சியைத் தொடங்கினார். இதன் மூலம் கிராமவாசிகளுக்கு மேம்பட்ட சாகுபடி நுட்பங்கள் மற்றும் மண் பரிசோதனை மற்றும் நீர் மற்றும் உர மேலாண்மை போன்ற ஆதரவு வழங்கப்பட்டது. பருத்தி விளைச்சலை மேம்படுத்துவதில் இந்த முயற்சி வெற்றிகரமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அப்போதைய இந்தியக் இந்திய குடியரசுத்தலைவராக இருந்த டாக்டர் டாக்டர் ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் தனது பேச்சில் இந்த முயற்சி குறித்து இரண்டு முறை குறிப்பிட்டுள்ளார். 2004 மே 11 தொழில்நுட்ப நாள் உரையிலும், 2005 சனவரி 26, அன்று இந்தியக் குடியரசின தின உரையிலும் பேசியுள்ளார்.. அவர் இந்த திட்டங்கள் நடைபெற்றுவரும் கெக்ரி பட்டர் என்ற கிராமத்திற்கும் 2005 டிசம்பர் 10 அன்று வருகை புரிந்தார்..[3][6]

சிறீஅரவிந்தர் வணிக மற்றும் மேலாண்மை கல்லூரி

தொகு

அரவிந்தரின் போதனைகளால் ஈர்க்கப்பட்ட எஸ். பி. ஓஸ்வால், லூதியானாவில் சிறீஅரவிந்தர் சமூக பொருளாதார மற்றும் மேலாண்மை ஆராய்ச்சி நிறுவனம் என்ற பெயரில் ஒரு அறக்கட்டளையை நிறுவினார். சிறீஅரவிந்தர் வர்த்தக மற்றும் மேலாண்மை கல்லூரி 2004 ஆம் ஆண்டில், அறக்கட்டளையின் கீழ், தொழில் சார்ந்த மற்றும் ஒழுக்கமான மேலாண்மை நிபுணர்களை உருவாக்க திறக்கப்பட்டது. இந்த கல்லூரி பஞ்சாப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[7] எஸ். பி. ஓஸ்வால் 1996 இல் செயல்படத் தொடங்கிய இமாச்சலப் பிரதேசத்தின் பட்டியில் ஸ்ரீ அரவிந்தோ பப்ளிக் ஸ்கூல் என்ற பொதுப் பள்ளி அமைப்பதில் பங்களிப்பு செய்துள்ளார். இது1996 ல் செயல்படத் துவங்கியது.

நிம்புவா கிரீன்ஃபீல்ட் (பஞ்சாப்) நிறுவனம்

தொகு
 
சண்டிகர் மற்றும் சுற்றியுள்ள வான்வழி புகைப்படம் மையத்தின் வலதுபுறத்தில் நிம்புவா கிரீன்ஃபீல்ட் (பஞ்சாப்) நிறுவனம்

நூற்றாண்டின் தொடக்கத்தில், எஸ்பி ஓஸ்வால் அபாயகரமான கழிவுகளை அகற்றுவதற்கான சிக்கலைக் கையாள்வதற்காக ஒத்த எண்ணம் கொண்ட சில நிறுவனங்களை திரட்டினார். வர்த்மான் குழுமம் உட்பட ஒன்பது நிறுவனங்கள் முன்வந்து, பஞ்சாப் மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன், பொது வரையறுக்கப்பட்ட நிறுவனமான நிம்புவா கிரீன்ஃபீல்ட் (பஞ்சாப்) நிறுவனம் 2004 மார்ச் 1 அன்று துவங்கப்பட்டது. அபாயகரமான கழிவுகளை சேமித்தல், சுத்திகரித்தல் மற்றும் அகற்றுவதற்கான பொதுவான வசதிகளை உருவாக்குவதே நிறுவனத்தின் முதன்மை மையமாக இருந்தது.[3][8]

புதிதாக உருவாக்கப்பட்ட நிறுவனம் 23 அக்டோபர் 2007 அன்று மொகாலியில் உள்ள நிம்புவா கிராமத்தில் ஒரு வசதியை அமைத்தது. தொடக்கத்தில் இருந்து 2013 ஜூலை 31, வரை 113763 டன் அபாயகரமான தொழில்துறை கழிவுகளை சுத்திகரித்து அப்புறப்படுத்தியதாக நிறுவனம் கூறுகிறது.[8] இந்த கழிவு மேலாண்மை, 20 ஏக்கர் நிலத்தில் பரவியுள்ளது. இந்த வசதி 2030 வரை மதிப்பிடப்பட்டுள்ளது.[9]

விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்

தொகு

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு

குறிப்புகள்

தொகு
  1. "Vardhman". Archived from the original on 12 ஆகஸ்ட் 2014. பார்க்கப்பட்ட நாள் 11 August 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. 2.0 2.1 "Padma announcement". பார்க்கப்பட்ட நாள் 7 August 2014.
  3. 3.0 3.1 3.2 "PBP" (PDF). பார்க்கப்பட்ட நாள் 11 August 2014.
  4. "Ludhiana news". Archived from the original on 14 ஆகஸ்ட் 2014. பார்க்கப்பட்ட நாள் 11 August 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. "Sachit Jain". பார்க்கப்பட்ட நாள் 11 August 2014.
  6. "Village adoption". பார்க்கப்பட்ட நாள் 11 August 2014.
  7. "SACCM". Archived from the original on 28 ஆகஸ்ட் 2014. பார்க்கப்பட்ட நாள் 11 August 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  8. 8.0 8.1 "NGPL". Archived from the original on 13 ஆகஸ்ட் 2014. பார்க்கப்பட்ட நாள் 11 August 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  9. "NGPL about". Archived from the original on 12 ஆகஸ்ட் 2014. பார்க்கப்பட்ட நாள் 11 August 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._பி._ஓஸ்வால்&oldid=3928261" இலிருந்து மீள்விக்கப்பட்டது