எஸ். பி. கோதண்டபாணி

சிறீபதி பண்டிதராத்யுலா கோதண்டபாணி (Sripati Panditharadhyula Kodandapani) தெலுங்குத் திரைப்படங்களில் இந்திய இசை இயக்குநராகவும் பின்னணி பாடகராகவும் இருந்தார். பண்டந்தி காப்பரம் (1972) என்றத் திரைப்படத்தில், "இதிகோ தேவுடு சேசினா பொம்மா" என்ற மறக்கமுடியாத என்ற தத்துவப் பாடலுக்கு குரல் கொடுத்திருந்தார். மொத்தம் 101 படங்களுக்கு இசை இயக்கியுள்ளார்.

எஸ். பி. கோதண்டபாணி
இயற்பெயர்ఎస్. పి. కోదండపాణి
இசை வடிவங்கள்பின்னணிப் பாடுதல்
தொழில்(கள்)பாடகர், இசை இயக்குநர்
இசைத்துறையில்1950கள்–1970கள். (இறப்பு 5.4.1974.)

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை தான் இசையமைத்த ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மரியாத ராமண்ணா (1967) திரைப்படத்தில் இந்திய திரைப்பட உலகிற்கு அறிமுகப்படுத்தினார். [1]

வாழ்க்கை

தொகு

இவர் தனது குழந்தைப் பருவத்தை குண்டூரில் கழித்தார். இவர் பாடல்களையும் கவிதைகளையும் பாடுவதோடு ஆர்மோனியம் வாசிப்பதையும் கற்றுக்கொண்டார். அடெப்பள்ளி இராமராவ் 1953இல் நா இல்லு என்ற படத்தில் குழுப் பாடலில் பாட ஒரு வாய்ப்பு அளித்தார். எஸ். தட்சிணாமூர்த்தியுடன் ஆர்மோனியக் கலைஞராகப் பணியாற்றினார். இவர் 1955ஆம் ஆண்டு "சந்தானம்" திரைப்படத்தில் தனிப் பாடகராக பாடினார். மூத்த இசை இயக்குனர் கே. வி. மகாதேவனின் கீழ் ஐந்து ஆண்டுகள் பணியாற்றினார்.

நடிகர் பத்மநாபம் நடத்திவந்த 'ரேகா முரளி ஆர்ட்ஸ்' என்ற நாடக நிறுவனத்தில் இசையமைப்பாளராக இருந்தார். கன்ன கொடுக்கு (1961) திரைப்படத்தில் முதன்முறையாக இசை இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து பதண்டி முந்துகு (1962), மஞ்சி ரோஜுலொச்சாய், பங்காரு திம்மராஜு, தோட்டலோ பிள்ளா கோட்டலோ ராணி, லொகுட்டு பெருமமல்லக்கேருகா (1966) போன்ற பல படங்களில் பணியாற்ற ஆரம்பித்தார். . [2]

இறப்பு

தொகு

இவர் ஏப்ரல் 5, 1974 அன்று தனது 42 வயதில் இறந்தார்.

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._பி._கோதண்டபாணி&oldid=3809696" இலிருந்து மீள்விக்கப்பட்டது