பத்மநாபம் (நடிகர்)

பசவராஜு வெங்கட பத்மநாப ராவ் ( Basavaraju Venkata Padmanabha Rao ) (20 ஆகஸ்ட் 1931 - 20 பிப்ரவரி 2010), பிரபலமாக பத்மநாபம் என அறியப்படும் இவர், இந்தியத் திரைப்படத்துறையில், குணச்சித்திர நடிகராகவும், நகைச்சுவை நடிகராகவும் , இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். இவர் முக்கியமாக தெலுங்குத் திரைப்படத்துறையில் பணியாற்றி வந்தார்.[1][2] பத்மநாபம் இந்தியாவின் மிகச்சிறந்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக கருதப்படுகிறார். குறிப்பாக இவரது நகைச்சுவை வெளிப்பாடுகள் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களின் பொற்காலத்தில் உரையாடல்கள் ஆகியவற்றால் குறிப்பிடப்படுகிறார்.[3][4][5] பத்மநாபம் அடிப்படையில் ஒரு நாடகக் கலைஞராக இருந்தார். இருப்பினும் இவர் திரையுலகிலும் வெற்றியைக் கண்டார். மேலும் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 1945இல் மாயலோகம் என்ற படத்தின் மூலம் திரைப்படத்தில் அறிமுகமானார். இவர் தனது நண்பர் வல்லம் நரசிம்ம ராவுடன் சேர்ந்து, எஸ். பி. கோதண்டபாணியை இசை இயக்குநராகக் கொண்டு "ரேகா அன்ட் முரளி ஆர்ட்ஸ்" என்ற நாடகக் குழுவை நிறுவினார்.[6]

பத்மநாபம்
பிறப்புபசவராஜு வெங்கட பத்மநாப ராவ்
(1931-08-20)20 ஆகத்து 1931
சிம்மாத்திரிபுரம், கடப்பா மாவட்டம், இந்தியா
இறப்பு20 பெப்ரவரி 2010(2010-02-20) (அகவை 78)
சென்னை, இந்தியா
பணிநடிகர், நகைச்சுவை நடிகர், இயக்குநர், திரிப்படத் தயாரிப்பாளர்
விருதுகள்நந்தி விருது

எந்தவொரு குறிப்பிட்ட நகைச்சுவைப் பாத்திரத்தையும் தனது மறக்கமுடியாத நடிப்பினால் வெகு திறமையாக கையாள்பவராகக் குறிப்பிடப்படுகிறார். தேசோதாரகுடு (1975) என்ற படத்தில் இவர் நடித்த ரிக்‌ஷா இழுப்பவரின் பாத்திரத்திலும் வெகு சிறப்பாக நடித்திருந்தார்.[1][2] இந்த பாத்திரம் 'ஆகலயி அன்னமடிகிதே பிச்சோடன்னரு நாயால்லு' பாடலுக்கு பிரபலமானது. மொத்தத்தில் எட்டுத் திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கி எஸ். பி. கோதண்டபாணியின் இசையமைப்பில் வெளிவந்த ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மரியாத ராமண்ணா படத்தின் மூலம் பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமண்யத்தை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தினார். 1969 ஆம் ஆண்டில் இவர் இயக்கிய கதாநாயகி மொல்லா என்ற திரைப்படம் இவருக்கு நந்தி விருதைப் பெற்றுத்தந்தது .[6]

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் தொழில்

தொகு

இவர் சாந்தம் மற்றும் பசவராஜு வெங்கட சேசையா ஆகியோருக்கு ஆந்திராவில் கடப்பா மாவட்டம் புலிவெந்துலா நகருக்கு அருகிலுள்ள சிம்மாத்ரிபுரம் என்ற ஊரில் [1] ஆகஸ்ட் 20, 1931 அன்று பிறந்தார்.

இவரது 12 வயதில் புகழ்பெற்ற இயக்குநர் குடவல்லி ராமபிரம்மம் இவருக்கு "மாயாலோகம்" (1943) படத்தில் வாய்ப்பளித்தார். ஏறக்குறைய 80 இயக்குநர்களுடன் பணிபுரிந்த இவர், தனது நீண்ட திரைவாழ்க்கையில் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். குடவல்லி ராமபிரம்மம், கண்டசாலா பலராமையா, எல். வி. பிரசாத், கே. வி. ரெட்டி ஆகியோருடன் தொடர்ந்து பணியாற்றினார்.[1][2]

இறப்பு

தொகு

பத்மநாபம் 2010 பிப்ரவரி 20 அன்று சென்னையில் மாரடைப்பால் இறந்தார். 78 வயதான இவருக்கு மனைவி, ஐந்து மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். மூத்த நடிகரான இவர் வழக்கமான யோகா பயிற்சியாளராக இருந்தார். அவர் இறக்கும் வரை நல்ல ஆரோக்கியத்தைக் கொண்டிருந்தார்.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 "Going great guns". தி இந்து. 2006-08-25. Archived from the original on 2007-01-21.
  2. 2.0 2.1 2.2 "Actor Padmanabham no more". The Hindu.
  3. "Popular comedian Padmanabham is dead". The New Indian Express. Archived from the original on 2016-06-03. பார்க்கப்பட்ட நாள் 2021-05-28.
  4. "Padmanabham Movie Actor Passes Away - Hyderabad News on fullhyd.com".
  5. Lakshmi Nivasam Songs - Soda Soda Andhra - Padmanabham. 16 March 2013 – via YouTube.
  6. 6.0 6.1 "Padmanabham dead". ChitraMala.com. 20 பெப்பிரவரி 2010. Archived from the original on 23 பெப்பிரவரி 2010. பார்க்கப்பட்ட நாள் 20 பெப்பிரவரி 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்மநாபம்_(நடிகர்)&oldid=4173664" இலிருந்து மீள்விக்கப்பட்டது