புலிவெந்துலா


புலிவெந்துலா (Pulivendula) என்பது இந்திய மாநிலமான ஆந்திராவிலுள்ள ஒய்.எஸ்.ஆர். கடப்பா மாவட்டத்திலுள்ள ஒரு நகரமாகும். பண்டைய நாட்டுப்புறக் கதைகளின்படி, இதன் பெயர் "புலி மண்டலம்" (புலிகளின் இருப்பிடம்) என்பதிலிருந்து உருவானது. இது முதலில் புலிகள் வசிக்கும் வனப்பகுதியாக இருந்தது. இது ஜம்மலமடுகு வருவாய் பிரிவின் புலிவெந்துலா வட்டத்தில் அமைந்துள்ளது. [3]

புலிவெந்துலா
పులివెందుల
புலிவெந்துலா is located in ஆந்திரப் பிரதேசம்
புலிவெந்துலா
புலிவெந்துலா
ஆந்திராவில் புலிவெந்துலாவின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 14°25′10″N 78°13′30″E / 14.41944°N 78.22500°E / 14.41944; 78.22500
நாடுஇந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்ஒ.யெஸ்.ஆர். கடப்பா
வட்டம்புலிவெந்துலா
அரசு
 • நிர்வாகம்நகராட்சி
 • சட்டமன்ற உறுப்பினர்ஜெகன் மோகன் ரெட்டி [1]
பரப்பளவு
 • மொத்தம்8.17 km2 (3.15 sq mi)
ஏற்றம்
272 m (892 ft)
மக்கள்தொகை
 • மொத்தம்1,12,768
 • அடர்த்தி14,000/km2 (36,000/sq mi)
மொழிகள்
 • அலுவல்தெலுங்கு
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
516 390
தொலைபேசி இணைப்பு எண்08568
வாகனப் பதிவுஏபி–04
இணையதளம்Pulivendula Municipality

நிலவியல்

தொகு

புலிவெந்துலா 14.4167° வடக்கிலும் 78.2333° கிழக்கிலும் அமைந்துள்ளது. [4] இதன் சராசரி உயரம் 272 மீட்டர் (895 அடி).

வரலாறு

தொகு

புகழ்பெற்ற அரசியல்வாதிகளின் பிறப்பிடமாக புலிவெந்துலா நகரம் ஆந்திர மாநிலத்தில் நன்கு அறியப்பட்டிருக்கிறது. ஒய். எஸ். ராஜசேகர ரெட்டி 2004 முதல் 2009 வரை ஆந்திராவின் முதல்வர்களில் ஒருவராக இருந்தார். 2009 ஆந்திர பிரதேச சட்டமன்றத் தேர்தலில் அவர் முதல்வராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் மூன்று மாதங்களுக்குப் பிறகு 2009 செப்டம்பர் 2 ஆம் தேதி நல்லமல்லா வனத்திற்கு அருகே நடந்த ஒரு ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தார். தற்போது இவரது மகனும், ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திர மாநில சட்டமன்றத்தின் தற்போதைய முதல்வராக உள்ளார்.

யுரேனியம் சுரங்கம்

தொகு

ஆகஸ்ட் 23, 2007 அன்று, பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (சி.சி.இ.ஏ) புலிவெந்துலாவிலிருந்து தெற்கே சுமார் 15 கி.மீ தொலைவில் உள்ள மபுச்சிந்தாலப்பள்ளி-தும்மலப்பள்ளியில் யுரேனியச் சுரங்கம் மற்றும் பதப்படுத்தும் தொழிற்சாலையை 11.06 பில்லியன் ரூபாய் (9 269.9 மில்லியன்) செலவில் நிறுவ ஒப்புதல் அளித்தது. இந்த ஆலையை இந்திய யுரேனிய நிறுவனம் நிறுவியது. 2007 ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் தேதி ஆந்திராவின் முதலமைச்சர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி அடிக்கல்லை அமைத்தார். [5] [6]

மார்ச் 2011 இல் ஆந்திராவின் தெற்கு கடப்பா படுகையில் உள்ள தும்மலப்பள்ளி பகுதியில் இயற்கை யுரேனியத்தின் பெரிய வைப்புக்கள் காணப்பட்டன. இந்த இருப்புக்கள் உலகின் மிக அதிக எண்ணிக்கையிலான முதல் 20 இடங்களில் இருப்பதை நிரூபிக்கக்கூடும்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Member of Legislative Assembly". ysrcongress.com. Archived from the original on 2 November 2014. பார்க்கப்பட்ட நாள் 19 November 2014.
  2. "Basic Information of Municipality". Commissioner & Director of Municipal Administration. Municipal Administration & Urban Development Department, Govt. of Andhra Pradesh. பார்க்கப்பட்ட நாள் 19 November 2014.
  3. "Revenue Divisions and Mandals". Official website of YSR Kadapa District. National Informatics Centre- Kadapa, Andhra Pradesh. Archived from the original on 6 July 2015. பார்க்கப்பட்ட நாள் 23 May 2015.
  4. Falling Rain Genomics.
  5. "New Uranium Mining Projects — India". பார்க்கப்பட்ட நாள் 2007-10-25.
  6. "India". Archived from the original on 12 October 2007. பார்க்கப்பட்ட நாள் 2007-10-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புலிவெந்துலா&oldid=3728740" இலிருந்து மீள்விக்கப்பட்டது