கதாநாயகி மொல்லா

கதாநாயகி மொல்லா (Kathanayika Molla ) என்பது நகைச்சுவை நடிகர் பி. பத்மநாபம் என்பவர் இயக்கி 1970 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த இந்தியத் திரைப்படமாகும். இந்தத் திரைப்படம் கவிஞர் மொல்லாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. இதில் நடிகை வாணிசிறீ முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இதில் ஜகமே ராமமயம் மற்றும் மனிஷினி பிரம்மய்ய மேட்டிடோ செசெனயா போன்ற பாடல்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் ஆந்திர அரசின் சிறந்த திரைப்படத்திற்கான நந்தி விருதையும் பெற்றது.

சமசுகிருதத்திலிருந்து தெலுங்கிற்கு இராமாயணத்தை மொழிபெயர்த்த கவிஞர் மொல்லாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட கதையாகும்.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கதாநாயகி_மொல்லா&oldid=3841120" இலிருந்து மீள்விக்கப்பட்டது