அதுகுரி மொல்லா
அதுகுரி மொல்லா (Atukuri Molla) (1440–1530)என்பவர் ஓர் தெலுங்குக் கவிஞர் ஆவார். இவர் தெலுங்கு மொழியில் இராமாயணத்தை எழுதியுள்ளார். இவரது சாதியால் அடையாளம் காணப்பட்ட இவர், கும்மாரா (குயவன்) மொல்லா என்று பிரபலமாக அறியப்பட்டார். மொல்லாம்பா அல்லது மொல்லா கேசன்னா செட்டி என்ற ஒரு குயவனுக்கு மகளாவார். அவர்கள் பய்யா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது. முந்தைய வரலாற்றாசிரியர்கள் காக்கத்திய இராச்சியத்தின் காலங்களில் திக்கனா சோமயாஜியின் சமகாலத்தவராக இவரை வைத்தனர். ஆனால், கந்துகூரி வீரேசலிங்கம் தனது 'ஆந்திர கவுலா சரித்திரத்தில்' இவர் கிருஷ்ணதேவராயரின் சமகாலத்தவர் என்று சுட்டிக்காட்டுகிறார். மகாபாரதத்தை மொழிபெயர்ப்பதில் திக்கனா சோமயாஜியின் எழுத்தாளராக இருந்த கும்மார குருநாதரின் சகோதரி என்ற முந்தைய கூற்றுக்களை அவர் நிராகரித்தார். காக்கத்தியம் மற்றும் விஜயநகர இராச்சியங்களுக்கு இடையிலான காலங்களில் வாழ்ந்த சிறீநாதா போன்ற கவிஞர்களுக்கு இவர் வணக்கம் செலுத்துகிறார். [1]
மொல்லா | |
---|---|
இயற்பெயர் | ఆతుకూరి మొల్ల |
பிறப்பு | அதுகுரி மொல்லா 1440 கோபாவரம், கடப்பா |
இறப்பு | 1530 |
புனைபெயர் | மொல்லாம்பா |
தொழில் | கும்மாரா (குயவன்) |
மொழி | தெலுங்கு |
தேசியம் | இந்தியன் |
காலம் | 14ஆம்–15ஆம் நூற்றாண்டுகள் |
வகை | கவிஞர் |
கருப்பொருள் | தெலுங்கு இராமயணம் |
இலக்கிய இயக்கம் | சனாதன தர்மத்தைப் பரப்புதல் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | இராமாயணத்தை சமசுகிருதத்திலிருந்து தெலுங்கு மொழிக்கு மொழிபெயர்த்தது |
குறிப்பிடத்தக்க விருதுகள் | 'கவி ரத்னா' |
சுயசரிதை
தொகுதாள்ளபாக்கம் அன்னமாச்சாரியாரின் மனைவி திருமலம்மாவுக்குப் பிறகு, மொல்லா இரண்டாவது பெண் தெலுங்கு கவிஞர் ஆவார். இவர் சமசுகிருத இராமாயணத்தை தெலுங்கில் மொழிபெயர்த்தார்.
இவரது தந்தை அதுகுரி கேசன்னா, ஆந்திரப் பிரதேசம் கடப்பாவிற்கு வடக்கே ஐம்பது மைல் தொலைவில் உள்ள பத்வெல் நகரத்திற்கு அருகிலுள்ள கோபாவரம் மண்டலத்தில் உள்ள கோபாவரம் என்ற கிராமத்தில் குயவனாக இருந்தர். சிறீசைலம் மல்லேசுவரரின் மீது பக்தியுள்ள சைவ பக்தராக இருந்தவர். அவர் தனது மகளுக்கு மொல்லா என்ற பெயரிட்டார். அதாவது "மல்லிகை" என்று பொருள்படும். இவரது கனிவான இயல்பு, தாராள மனப்பான்மை மற்றும் அன்பு ஆகியவற்றால் மொல்லா தனது சொந்த கிராமத்தில் மட்டுமல்ல, சுற்றியுள்ள குக்கிராமங்களிலும் நன்கு அறியப்பட்டார்.
மொல்லா சிவனை தனது குருவாகக் கொண்டர். மேலும் இவரது உத்வேகம் தெலுங்கில் பாகவத புராணத்தை எழுதிய போத்தன்னாவிலிருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. அவரைப் போலவே, இவர் சைவ சமயத்தைச் சேர்ந்தவராவர். ஆனால் இராமாயணம் ( விஷ்ணுவின் அவதாரம்) பற்றி எழுதினார். மேலும் தனது இராமாயணத்தை எந்த அரசனுக்கும் அர்ப்பணிக்க மறுத்துவிட்டார். அந்த காலங்களில் கவிஞர்களுக்கு இது ஒரு பொதுவான நடைமுறையாக் இருந்தது.
வரதராஜன் என்பவரின் "வைணவ இலக்கிய ஆய்வு" என்ற புத்தகத்தில், "இவரது புகழ் பரவியதால், அவர் அரச சபைக்கு அழைக்கப்பட்டு, கிருஷ்ணதேவராயன் மற்றும் அவரது கவிஞர்களுக்கு முன்னால் இராமாயணத்தை ஓதும் வாய்ப்பு கிடைத்தது. இவர் தனது முதுமையை சிறீசைலத்தில் கழித்தார்." எனத் தெரிகிறது.
படைப்புகள் மற்றும் நடை
தொகுஇவரது படைப்பு மொல்லா இராமாயணம் என்று அழைக்கப்படுகிறது. மேலும் இது தெலுங்கில் எழுதப்பட்ட பல இராமாயணங்களில் எளிமையான ஒன்றாகும்.
இவர் முதன்மையாக எளிய தெலுங்கைப் பயன்படுத்தினார் . மேலும் சமசுகிருத சொற்களை மிகவும் அரிதாகவே பயன்படுத்தினார். பொட்டானாவைப் போலவே இவருக்கு முன்னர் எழுதிய கவிஞர்கள் சமசுகிருத சொற்களை தங்கள் படைப்புகளில் அதிஅக அளவில் பயன்படுத்தினர்.
பிற்கால வாழ்வு
தொகுதனது சொந்த கிராமத்திற்குத் திரும்பிய மொல்லா, ஏற்கனவே சிறீகாந்த மல்லேசுவரருக்கு அர்ப்பணிக்கப்பட்ட தனது இராமாயணத்தை கோயில் அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். தனது வாழ்க்கையின் பணி முடிந்ததும், கிராமவாசிகளிடமிருந்தும் தெய்வத்தை விட்டும் வெளியேறி, சிறீசைலத்தில் தனது வாழ்நாளை கழிக்கச் சென்றார். தன்னுடைய கடைசி நாட்களில், உத்வேகம் மற்றும் ஞானம் பெற தன்னிடம் வந்தவர்களுக்குப் பிரசங்கிக்க அதிக நேரம் செலவிட்டாள். கி.பி 1530 இல் தொண்ணூறு வயதில் பழுத்த வயதில் மொல்லா சாமதிக்கு சென்றார். மொல்லா தனது வாழ்நாள் முழுவதும் இயற்றிய கவிதைகள் தெலுங்கு பேசும் இடமெல்லாம் நாடு முழுவதும் பாடப்படுகின்றன. இவரது எளிமையும் ஆழ்ந்த ஆன்மீக ஆர்வமும் கடந்த ஐநூறு ஆண்டுகளில் இவரை பிரபலமாக்கியுள்ளன. [2]
கௌரவங்கள்
தொகு- ஆந்திர மாநில அரசு ஐதராபாத்தில் இவரது சிலையை சில பெரிய தெலுங்கு பிரமுகர்களுடன் சேர்ந்து எழுப்பியது..
- இவரது வாழ்க்கை கதையின் ஒரு கற்பனையான கணக்கு 1969 இல் வெளியிடப்பட்ட கும்மாரா மொல்லா என்ற தலைப்பில் இந்தூரி வெங்கடேசுவர ராவ் என்பவர் எழுதியுள்ளார்.
- இதனை அடிப்படையாகக் கொண்டு, மற்றொரு எழுத்தாளர் சுங்கரா சத்தியநாராயணன் ஒரு கவிதைத் தொகுப்பினை எழுதினார். இது மிகவும் பிரபலமாகி ஆந்திரா முழுவதும் பாடப்பட்டுள்ளது
- மகளிர் சங்கங்களின் பெண்கள் முன்னேற்றத்தின் அடையாளமாக இவர் பயன்படுத்தப்பட்டார். ஒரு சமீபத்தில், 2006 இல் ஐதராபாத்தில் உள்ள இவரது சிலையிலிருந்து பெண்கள் உரிமை போராட்டம் ஒன்று தொடங்கியது.
- இவரைப் பற்றி 'கதாநாயகி மொல்லா 'என்றத் திரைப்படம் தயாரிக்கப்பட்டது, வாணிசிறீ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
மேலும் காண்க
தொகு- கதாநாயகி மொல்லா, 1970 ல் வெளிவந்த தெலுங்கு திரைப்படம். இதை பி பத்மநாபம் என்பவர் தயாரித்து இயக்கியிருந்தார்.
- பொட்டானா, பாகவத புராணத்தை மொழிபெயர்த்த மற்றொரு கவிஞரும் பக்தருமாவார் .
- நெல்லூரைச் சேர்ந்த மற்றொரு பண்டைய கவிஞர் திக்கனா
- தெலுங்கில் உள்ள மற்றொரு பழங்கால பெண் கவிஞரான திம்மக்கா .
குறிப்புகள்
தொகு- ↑ Creators of Telugu Epic literature- Kummara Molla. 26 September 2014
- ↑ ‘Molla’ – The Saint Poetess of kadapa district. kadapa.info
வெளி இணைப்புகள்
தொகு- A news paper article about Molla background பரணிடப்பட்டது 2007-10-01 at the வந்தவழி இயந்திரம்
- Vepachedu Telugu Women author list
- இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் Kathanayika Molla
- Indian women authors
- Molla biography
- A news article about Women holding candles in front of Molla பரணிடப்பட்டது 2007-10-01 at the வந்தவழி இயந்திரம்