எஸ். பி. சற்குணா பாண்டியன்

சர்குண பாண்டியன் (Sarguna Pandian) என்பவர் ஒரு தமிழக பெண் அரசியல்வாதியாவார்.தேனி மாவட்டம் சின்னமனூரைச் சேர்ந்தவர் சற்குணபாண்டியன். திமுக மேடைகளில் இளம் பேச்சாளராக அறிமுகமானார்.இவர் தி.மு.கவின் துணைப் பொதுச்செயலாளராக இருந்தவர்.[1][2][3] இவர் சமூகநலத்துறை அமைச்சராக 1996 தேர்தலுக்குப்பின்[4] அமைந்த புதிய அரசில் இருந்தார். இவர் தி.மு.க. சார்பில் தமிழ சட்டமன்றத்துக்கு இராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் இருந்து 1989, மற்றும் 1996 ஆண்டு தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5][6]

வகித்த பொறுப்புகள்

தொகு

திமுகவில் மகளிர் அணி துணை செயலாளர், மாநில செயலாளர், தலைமை செயற்குழு உறுப்பினர் போன்ற பொறுப்புகளை வகித்தார். மகளிர் ஆணையத்தின் தலைவராகவும், பொறுப்பு வகித்த அவர் இறக்கும் வரை துணை பொதுச்செயலாளராக இருந்தார். [7]

இறப்பு

தொகு

இதய அறுவை சிகிச்சை செய்த அவர் கடந்த சில மாதங்களாக சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் 13 ஆகத்து 2016 அன்று அதிகாலை 3.30 மணியளவில் சற்குணபாண்டியன் காலமானார்.[7]

மேற்கோள்கள்

தொகு
  1. "திமுக துணை பொதுச் செயலாளர் எஸ்.பி. சற்குண பாண்டியன் ராஜினாமா?". ஒன் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 5 பெப்ரவரி 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "30% quota for women sought". The Hindu. 30 May 2008. http://www.hindu.com/2008/05/30/stories/2008053051100300.htm. 
  3. "Karunanidhi elected DMK president, Stalin treasurer". IBN Live. 27 December 2008. http://ibnlive.in.com/news/karunanidhi-elected-dmk-president-stalin-treasurer/81422-3-2.html. 
  4. "Women yet to make presence felt in House". The Hindu. 8 March 2000. http://www.hinduonnet.com/thehindu/2000/03/08/stories/04082239.htm. 
  5. 1989 Tamil Nadu Election Results, Election Commission of India
  6. "1996 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. பார்க்கப்பட்ட நாள் 2016-02-05.
  7. 7.0 7.1 "திமுக துணைப் பொதுச்செயலர் சற்குண பாண்டியன் காலமானார்". ஒன் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 13 ஆகத்து 2016.