எஸ். முத்துக்குமாரன்

ஓய்வு பெற்ற உதவிப் பதிவாளர் நாயகமான எஸ். முத்துக்குமாரன் அவர்கள் ஈழத்தைச் சேர்ந்த வானொலி, மேடைநாடாகாசிரியராகவும் எழுத்தாளராகவும் உள்ள சமகாலத்தவராகும். இவர் சமகால எழுத்தாளரான சைவப் புலவர். எஸ். தில்லைநாதன் அவர்களின் மூத்த சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ். முத்துக்குமாரன்
சாமித்தம்பி முத்துக்குமாரன்
பிறப்புமுத்துக்குமாரன்
மார்ச் 14, 1938
துறைநீலாவணை, மட்டக்களப்பு, இலங்கை
இருப்பிடம்கல்லடி
தேசியம்இலங்கைத் தமிழர்
அறியப்படுவதுஈழத்து எழுத்தாளர்
சமயம்சைவம்
வாழ்க்கைத்
துணை
தேவலெட்சுமி

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

மட்டக்களப்பு மாவட்டத்தில் துறைநீலாவணையில் சாமித்தம்பி, மாரிமுத்து தம்பதிகளுக்கு மூத்த மகனாக 1938-03-14 இல் பிறந்தார். மண்டூரை புகுந்தகமாகவும், கல்லடியைத் தற்போது வசிப்பிடமாகவும் கொண்டுள்ளார்.

அரச பணி

தொகு

அரச சேவையில் 1958 ஆம் ஆண்டு இணைந்து பதிவாளர் நாயகம் திணைக்களத்தில் உதவிப் பதிவாளர் நாயகமாகப் பதவி வகித்து 1998 இல் ஓய்வு பெற்றார்.

இலக்கியப் பணி

தொகு

1961 ஆண்டு முதல் வானொலி நாடக எழுத்தாளராக படைப்புத்துறைக்குள் நுழைந்தார். சமயம் இலக்கியம் சம்பந்தமான நாடகங்களையே இவர் எழுதி வந்துள்ளார். இவரது ஆக்கங்கள் சொந்தப் பெயரிலும், சுகீர்தரன் என்னும் புனை பெயரிலும் வெளிவந்தன.

கட்டுரைகள்

தொகு
  1. கன்னித் தமிழ்-சனவரி 1961 இல் கலைமுரசு என்னும் பத்திரிகையில் வெளியாகியது
  2. துணைநீலாவணையில் கண்ணகியம்மன் திருவிழாக் குன்றின் மீது அதிசயக் காட்சி 1963-06-25 இல் தினகரனில் வெளியானது.

சிறுகதைகள்

தொகு
  1. இதுதான் விதியா:1963-05-19 இல் வீரகேசரியில் வெளியானது.
  2. நீங்காத நினைவுகள்:1966-12-31 இல் ராதா எனும் பத்திரிகையில் வெளியானது.
  3. நூன சித்தி:பெப்ரவரி 1962 இல் கலை முரசு எனும் பத்திரிகையில் வெளியானது.

நூல்கள்

தொகு

வானொலியில் வெளியான நாடகங்களைத் தொகுத்து வீரவில்லாளி எனும் நாடகப் புத்தகம் 2008 வெளியானது.

மேடை நாடகம்

தொகு

நாரதர் விளைத்த கலகம் எனும் கம்சரம்மானை இலக்கியத்திலுண்டான பகுதி நாடகமாக 1964-11-03 இல் தினகரனில் வெளியாகியது.

விருதுகள்

தொகு
  1. றோட்டரிக் கழகத்தினால் 1998 ஆம் ஈண்டில் சிறந்த மக்கள் சேவைக்கான விருது
  2. 2008ஆம் ஆண்டு அரச சாகித்திய நாடகள இலக்கியத்திற்கான விருதுச் சான்றிதழ்
  3. 2009ஆம் ஆண்டு மட்டக்களப்பு எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தினால் தமிழியல் விருது
  4. 2011 ஆம் ஆண்டு அரசாங்கத்தினால் கலாபூசணம் விருது.

வானொலியில் ஒலிபரப்பான நாடகங்கள்

தொகு
தலைப்பு இலக்கியம் ஒலிபரப்பான திகதி
வீரவில்லாளி மகாபாரதம் 1961-03-23
வண்ணமகள் மகாபாரதம் 1962-05-03
தூது சென்ற காவலன் நளவெண்பா 1962-10-18
கலியின் வினை நளவெண்பா 1963-01-17
சிவக்குழந்தை பெரியபுராணம் 1964-10-22
பூதகி கம்சரம்மானை (பாரதம்) 1964-12-03
உருத்திராக்கப் பூனை புனைகதை 1965-12-22
நான் பிரம்மரிஷி கௌசிகமுனி கதை (இராமாயணம்) 1966-10-23
தோழி நீ வாழ்க! குறுந்தொகை 1968-10-06
பரி ஏறிய பரமன் திருவாதவூரடிகள் புராணம் 1969-11-15
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._முத்துக்குமாரன்&oldid=3488226" இலிருந்து மீள்விக்கப்பட்டது