துறைநீலாவணை
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
துறைநீலாவணை மட்டக்களப்பின் வடக்கே இறுதி எல்லைக் கிராமமாகும். இவ்வூர் மட்டக்களப்பு நகரில் இருந்து தெற்கே 24 மைல் தொலைவில் அமைந்துள்ளது. இது கிழக்குப் பகுதியில் குளங்களினாலும், மேற்குப் பகுதியில் மட்டக்களப்பு வாவியினாலும் சூழப்பெற்ற தீவாக அமைந்துள்ளது. இது மட்டக்களப்பு பட்டிருப்பு தேர்தல் தொகுதியில், மண்முனை தென்னெருவில்பற்று பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ளது. இது வடக்கு, வடக்கு1, தெற்கு1, தெற்கு2 என நான்கு பிரிவுகளைக் கொண்டுள்ளது. இதன் முறையே 5ஆம், 6ஆம், 7ஆம், 8ஆம்; வட்டாரங்கள் என அழைப்பது இவ்வூர்மக்களது மரபாகும். இவ்வூரின் மக்கள்தொகை 2005ம் ஆண்டில் 4,563 ஆகும். இங்குள்ள மொத்தக் குடும்பங்கள் 1222 ஆகும். பல விவசாய நிலங்களைக் கொண்ட இக்கிராமம் பிரதான தொழிலாக விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டவை.
துறைநீலாவணை
Thuraineelavanai | |
---|---|
ஊர் | |
ஆள்கூறுகள்: 7°26′50.28″N 81°47′57.1194″E / 7.4473000°N 81.799199833°E | |
நாடு | இலங்கை |
மாகாணம் | கிழக்கு மாகாணம் |
மாவட்டம் | மட்டக்களப்பு |
பிர. செயலகம் | மண்முனை தெற்கு, எருவில் பற்று |
மக்கள்தொகை | |
• இனங்கள் | இலங்கைத் தமிழர் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீடு | 30254 |
இங்குள்ள கோயில்கள்
தொகு- துறைநீலாவணை கண்ணகியம்மன் ஆலயம்
- துறைநீலாவணை முத்துமாரியம்மன் கோயில்
- துறைநீலாவணை தில்லையம்பலப் பிள்ளையார் கோயில்
பாடசாலைகள்
தொகு- துறைநீலாவணை மகா வித்தியாலயம்
- துறைநீலாவணை விபுலானந்த வித்தியாலயம்
- .துறைநீலாவணை சித்தி விநாயகர் வித்தியாலயம்
- . துறைநீலாவணை மெதடிஸ்த மிசன் தமிழ் கலவன் பாடசாலை