எஸ். ராஜேந்திர பாபு

எஸ். ராஜேந்திர பாபு (S. Rajendra Babu) என்பவா் இந்தியாவின் 34 வது தலைமை நீதிபதியாக பதவி வகித்தாா். இவர் இந்தியாவின் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.[1]

நீதிபதி எஸ்.ராஜேந்திர பாபு
Justice S. Rajendra Babu
2004
34 ஆவது இந்தியத் தலைமை நீதிபதி
பதவியில்
2 மே 2004 – 1 சூன் 2004
நியமிப்புஆ. ப. ஜெ. அப்துல் கலாம்
முன்னையவர்வி. நா. கரே
பின்னவர்இரமேஷ் சந்திர லகோதி
தலைவர், இந்தியாவின் தேசிய மனித உரிமை ஆணையம்
பதவியில்
2 ஏப்ரல் 2007 – 31 மே 2009
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 சூன் 1939 (1939-06-01) (அகவை 84)
தேசியம்இந்தியர்


வாழ்க்கை வரலாறு தொகு

எஸ். ராஜேந்திர பாபு, பெங்களூரில் 1939 ஆம் ஆண்டு சூன் 1 அன்று பிறந்தார். கர்நாடக பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பெல்காம் ராஜா ராஜ் லகாமகெளதா சட்டக் கல்லூரியில் இருந்து தனது இளங்கலை சட்டப் பட்டத்தைப் பெற்றாா்.

தொழில் வாழ்க்கை தொகு

1988 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கர்நாடக உயர்நீதி மன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவர் 1997 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 ஆம் நாள் இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2004 ஆம் ஆண்டு மே 2 அன்று உச்சநீதி மன்றத்தின் மூத்த துணை நீதிபதியாக இருந்த நீதிபதி வி. நா. கரே இந்தியாவின் தலைமை நீதிபதியாகப் பதவியேற்றார். இவரது பதவிக்காலம் ஒரு மாதத்திற்கும் குறைவானது ஆகும். இவர் 2004 ஆம் ஆண்டு சூன் 01 அன்று தனது 65 வது பிறந்தநாளில் ஓய்வு பெற்றார்.

உச்ச நீதிமன்றத்தில் அவரது பதவிக்காலத்தில், பாபு உரிமையியல் சட்டம், குற்றவியல் சட்டம், அரசியலமைப்பு சட்டம், சுற்றுச்சூழல் சட்டம், வரி விதிப்பு, கார்ப்பரேட் சட்டம் மற்றும் அறிவுசார் சொத்து கருத்தகள் சார்ந்த வழக்குகளில் பல தரப்பு தீர்ப்புகளை வழங்கினார். இந்திரா காந்தியின் படுகொலைக்குப் பின்னர், சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பான வழக்கில் பாபு கும்பல் உளவியலைப் பகுப்பாய்வு செய்தார். இவர் 1986 ஆம் ஆண்டு இசுலாமிய (விவாகரத்து உரிமைகள் பாதுகாப்பு) சட்டத்தின் விதிகளால் வழங்கப்பட்டுள்ள வசதிகளையும் விளக்கினார்.

2007 ஏப்ரல் 2 ஆம் தேதி தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் ஐந்தாவது தலைவராகப் பதவியேற்றார். இந்தப் பதவியில் 2009 ஆம் ஆண்டு மே 31 வரை பதவி வகித்தார்.[2] 

நீதித்துறைப் பணிக்காலத்திற்குப் பிந்தைய காலம் தொகு

பாபு தற்போது இந்திய அறிவியல் பல்கலைக்கழகத்தின் தேசிய சட்டப் பள்ளியில் ஐசிஐசிஐ தலைவராக (பேராசிரியர்) உள்ளாா். வேதாந்தாவில் அதிக ஆர்வமாக உள்ளவா். பாபு 25 ஆண்டுகளுக்கும் மேலாக  சமூக நலப் பணிக்காக பயிற்சியளித்து வருகிறார். அதுமட்டுமின்றி சர்வதேச செவிலியர் சேவை சங்கத்தின் தலைவராக உள்ளாா்.

மரியாதை தொகு

2005 ஆம் ஆண்டில் கர்நாடகா பல்கலைக் கழகம் இவரது கல்வி மற்றும் சேவையைக் கருத்தில் கொண்டு கௌரவ முனைவர் பட்டம் வழங்கியது.

ஆதாரங்கள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-07-14. பார்க்கப்பட்ட நாள் 2017-07-16.
  2. Composition Of Commission

வெளி இணைப்பு தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._ராஜேந்திர_பாபு&oldid=3841985" இலிருந்து மீள்விக்கப்பட்டது