சீ. வளர்மதி

(எஸ். வளர்மதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சீ. வளர்மதி (S. Valarmathi) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரும்,பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஆவார். இவர் 2015 ஆம் ஆண்டு நடந்த இடைத்தேர்தல் மற்றும் 2016 சட்டமன்றத் தேர்தலில் திருவரங்கம் தொகுதியிலிருந்து, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]

சீ. வளர்மதி
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர்
ஆளுநர் சி. வித்தியாசாகர் ராவ்
கொனியேட்டி ரோசையா
முன்னவர் ஜெ. ஜெயலலிதா
தொகுதி திருவரங்கம்
தொகுதி திருவரங்கம்
தனிநபர் தகவல்
பிறப்பு சூன் 25, 1965 (1965-06-25) (அகவை 55)[1]
குளித்தலை, கரூர், தமிழ்நாடு , இந்தியா
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி Indian Election Symbol Two Leaves.png அதிமுக
வாழ்க்கை துணைவர்(கள்) என். சீதாராமன்[2]
பிள்ளைகள் சீ. ஸ்ரீராம், சீ.ஹரிராம்
இருப்பிடம் திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு, இந்தியா
தொழில் வழக்கறிஞர், அரசியல்வாதி
சமயம் இந்து சமயம்

ஆசிரியர் பயிற்சியில் முதுகலை படிப்புப் படித்துள்ள இவர் ஒரு வழக்கறிஞர் ஆவார். இவரது கணவர் சீதாராமன் திருச்சி பாய்லர் ஆலையில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஸ்ரீராம், அரிராம் என்ற இரு மகன்கள் உள்ளனர்.[4] அ.தி.மு.கவில் மாநில அமைப்புச் செயலாளராகப் பொறுப்பு வகித்த இவர், அப்போதைய முதல்வரான ஜெயலலிதா, மே 2016 ஆம் ஆண்டு இவரை பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக நியமனம் செய்தார். இது தமிழக அரசின் முதல் அமைச்சரவைப் பதவியாகும்.[5][6]

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீ._வளர்மதி&oldid=3143492" இருந்து மீள்விக்கப்பட்டது