ஏகாதசி (பாடலாசிரியர்)

ஏகாதசி (பிறப்பு:5 மே 1976) தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும், திரைப்பட இயக்குநரும், நாவலாசிரியரும், சிறுகதையாளரும், கட்டுரையாளரும் ஆவார். இவரது எழுத்துப் பணி 10 வயதில் கவிதை எழுதுவதில் இருந்து தொடங்கியது.

2023 சூலை மாதம் வரை, 300 இற்கும் மேற்பட்ட தனியிசை பாடல்களும், 300 இற்கும் மேற்பட்ட திரையிசைப் பாடல்களும் எழுதியுள்ளார். இவர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தில்[1] மாநில துணைச் செயலாளர் பொறுப்பில் உள்ளார்.

இவரது தனியிசை பாடல்களான ‘ஆத்தா உன் சேலை’[2] , ‘அப்பா கைய புடுச்சி நடந்தா’ ஆகியவை உலக புகழ்பெற்றவை. Oru Cup Tea, Oru Cup Tea Music, Cuckoo போன்ற YouTube Channel மற்றும் "சமம்" வெளியீடு பதிப்பகம், "சமம் திரை" தயாரிப்பு நிறுவனம் போன்றவற்றை நடத்திவருகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு தொகு

இவர் பிறந்தது மதுரை மாவட்டம், செக்கானூரணி அருகேயுள்ள பணியான் கிராமம். கழுவத்தேவர் - பூவாயி அம்மாள் ஆகியோருக்கு மகனாக, கூலி விவசாய குடும்பத்தில் பிறந்தார். இவர் மனைவியின் பெயர் சலோமி, மகன் பெயர் கவிராஜன். 1999இல் இருந்து திரைத்துரையில் இயங்கி வருகிறார். முதல் நூல் “முதல் தூரல்” (கவிதை, 1994) , முதல் பாடல் ‘ஆயுள் ரேகை’ (2004) படத்தில் ”கொலகாரி வாரா”, இயக்கிய முதல் திரைப்படம் ‘கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை’(2011).

படைப்புகள் தொகு

கவிதைத் தொகுப்புகள் தொகு

தனியிசைப் பாடல்கள் தொகு

  • ஏகாதசி பாடல்கள் - தொகுதி 1 (2015)
  • ஏகாதசி பாடல்கள் - தொகுதி 2 (2018)
  • ஏகாதசி பாடல்கள் - தொகுதி 3 (2022)

சிறுகதைத் தொகுப்பு தொகு

  • மஞ்சள் நிற ரிப்பன் (2015)

புதினம் தொகு

இயக்கிய திரைப்படங்கள் தொகு

  • எருக்கம் பூ (2010)
  • கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை (2011)[3]
  • அருவா (2021)

சிறப்புகள் தொகு

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைச் செயலாளராக உள்ளார்.

விருதுகள் தொகு

  • த.மு.எ.க.ச. விருது (2011)
  • கு.சி.பா அறக்கட்டளை விருது (2012)
  • புரட்சிக் கவிஞர் விருது
  • வி4 விருது (2018)
  • கவிப்பித்தன் விருது (2019)
  • பெர்லின் விருது (2021) போன்ற விருதுகளை பெற்றுள்ளார்.

முக்கிய தனியிசை பாடல்கள் தொகு

1) ஆத்தா ஓஞ்சேல

2) அப்பா கையைப் புடிச்சு நடந்தா

3) தொண்டக்குழிக்கு தண்ணி கேட்டோம்

4) ஏலே கிறுக்குப் பயலே

5) ஒரு ஊருல ஒரே ஒரு கிழவி

6) மல்லிக்கொடியே

7) எனக்கும் கூட எத்தனையோ

8) மரங்களைப் பாட

9) வாக்கப்பட ஆச

10) ஓல குடிச கட்டி

11) சாராயம் வித்த காசுல

12) தேவதையுமில்ல தெய்வமுமில்ல

13) ரெட்ட ஜடை போல

14) முக்கா கையி சட்ட

15) உசுர அறுத்துப் போட்டு

16) உலகம் ரொம்ப சிறுசுடா

17) சார மேல காத்து

18) ஃபீல் ஆவுடா மச்சான்

19) ஐ மிஸ் யூ செல்லம்

20) செங்குத்தாய் நகரும் மழையே

முக்கிய திரைப்படப் பாடல்கள் தொகு

1) அவள் பெயர் தமிழரசி - நீ ஒத்த சொல்லு சொல்லு - குஜு குஜு கூட்ஸ் வண்டி - வடக்கா தெக்கா

2) குட்டிப்புலி - ஆத்தா ஓஞ்சேல

3) ஆடுகளம் - ஒத்த சொல்லால

4) திட்டக்குடி - ஒத்த உசுருக்குள்ள - காத்துக்கிங்கே கதவுகளும்

5) மழைக்காலம் - தேவதை நீ தான் - கோடி மின்னல்

6) மதயானைக் கூட்டம்[3] - கோணக் கொண்டக்காரி - உன்னை வணங்காத - எங்கப்போற மகனே - முக்குலத்து வீரரையா - கொம்பூதி கொட்டடிச்சி

7) வில் அம்பு - ஆள சாச்சுப்புட்டா கண்ணால

8) ஈட்டி - நாம்புடிச்ச மொசக்குட்டியே - பஞ்சுமிட்டாய் மேல தீயே

9) செம - உருட்டுக் கண்ணால

10) அம்மாவின் கைப்பேசி - அம்மா என்றால்

11) கொடிவீரன்  - அன்னமே ஏ அன்னமே - கொலவாள எடுங்கடா

12) அஞ்சல - கொள்ளங்குடி கருப்பா

13) மெஹந்தி சர்க்கஸ் - மயில் போல இளவரசி

14) எனக்கு இன்னோர் பேரிருக்கு - டான்ஸ் வித் மி நிலவே

15) சண்டக்கோழி 2 - கம்பத்துப் பொண்ணு

16) அசுரன் - கத்தரிப் பூவழகி

17) சூரரைப் போற்று - மண்ணுருண்ட மேல

18) வீரபாண்டியபுரம் - அடி அவர

19) யானை - என்ன ஒத்தையில

20) அழகிய கண்ணே -  வச்சித்தான் செய்யுறாங்க

21) அருவா - காசு பணமெல்லாம் சும்மா

22) சர்தார் - சொர்க்கா பூவே ஒன்ன

23) இராவண கோட்டம் - ராவண கோட்டத்துல - It-அது But-ஆனால் - தல சாஞ்சுருச்சே - மாயம்மா

24) கள்வன் - கட்டழகு கருவாச்சி

25) தண்டட்டி - தலையாட்டி பேசுறப்போ

26) கக்கன் - கக்கன் எனும் மாமனிதன் - ஒரு ஏழை தெய்வம்

27) அநீதி - பூ நாழி பொன் நாழி

மேற்கோள்கள் தொகு

  1. "மாநில மாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகள்". தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம். September 8, 2023. பார்க்கப்பட்ட நாள் 8 September 2023.
  2. "சூரரைப் போற்று பாட்டுக்கு விருது கிடைக்கலேன்னு நண்பர்கள் வருத்தப்பட்டாங்க - பாடலாசிரியர் ஏகாதசி". சினிமா விகடன் இணையதளம். 11 சூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 8 September 2023.
  3. 3.0 3.1 3.2 "தினமலர் பத்திரிக்கையில் வந்த நேர்காணல்". தினமலர் இணைய பத்திரிக்கை. 18 மே 2014. பார்க்கப்பட்ட நாள் 11 September 2023.
  4. "ஊரடங்கு உயிரடங்கு புத்தகம் இணையத்தில் வாசிக்க". Everand வெளியீட்டாளர்கள். 25 பெப்பிரவரி 2023. பார்க்கப்பட்ட நாள் 22 ஏப்பிரல் 2024.
  5. "அவளுக்கும் நிலவுக்கும் ஆறு வித்தியாசங்கள் புத்தக வெளியீட்டு விழா செய்தி". தமிழ்toதமிழ் இணையதளச் செய்தி. 15 அக்டோபர் 2022. பார்க்கப்பட்ட நாள் 11 September 2023.
  6. "கூகுள் புத்தகக் குறிப்பு". தமிழ்toதமிழ் இணையதளச் செய்தி. 11 September 2023. பார்க்கப்பட்ட நாள் 11 September 2023.

https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/971732-it-s-a-reality-that-songs-are-lacking-in-films-lyricist-ekadasi-interview.html

https://cinema.vikatan.com/kollywood/lyricist-ekadasi-interview-about-his-film-career

https://www.puthiyathalaimurai.com/features/lyricist-ekadasi-interview

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏகாதசி_(பாடலாசிரியர்)&oldid=3938275" இலிருந்து மீள்விக்கப்பட்டது