கொடிவீரன்

எம். முத்தையா இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

கொடிவீரன் (Kodiveeran) ஒரு இந்திய தமிழ் மொழித் திரைப்படமாகும். இத்திரைப்படம் குடும்பப் பின்னணி கொண்ட அதிரடித் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தின் இயக்குநர் எம். முத்தையா ஆவார். சசிக்குமார் (இயக்குநர்), மகிமா நம்பியார் ஆகியோர் கதையை நகர்த்திச் செல்லும் முக்கிய இணையாக நடித்துள்ளனர். குட்டிப் புலி திரைப்படத்திற்குப் பிறகு இயக்குநரும், இயக்குநர் நடிகரும் இணையும் இரண்டாவது படம் இதுவாகும்.[1][2] கொடி வீரன் திரைப்படமானது எம். சசிக்குமாரின் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட படமாகும். [3]

கொடிவீரன்
இயக்கம்எம். முத்தையா
தயாரிப்புஎம். சசிக்குமார்
கதைஎம். முத்தையா
இசைஎன். ஆர். ரகுநந்தன்
நடிப்புசசிக்குமார் (இயக்குநர்)
விதார்த்
மகிமா நம்பியார்
சனுசா
பசுபதி
பாலா சரவணன்
பூர்ணா
ஒளிப்பதிவுஎஸ். ஆர். கதிர்
படத்தொகுப்புவெங்கட் ராஜன்
கலையகம்கம்பெனி தயாரிப்பு நிறுவனம்
விநியோகம்கம்பெனி புரொடக்ஷன்ஸ்
வெளியீடுதிசம்பர் 7 2017
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

தயாரிப்பு தொகு

குட்டிப் புலி, கொம்பன் மற்றும் மருது ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து இயக்குநர் எம். முத்தையாவின் நான்காவது திரைப்படமாகும். இத்திரைப்படமும் வழக்கமான வெற்றிக்கு உத்தரவாதம் தரக்கூடிய அண்ணன் – தங்கைப் பாசத்தை அடிப்படையாகக் கொண்ட, கிராமியப் பின்னணி கொண்ட பொழுதுபோக்குப்படமாகவே அமைந்துள்ளது. சசிக்குமார் (இயக்குநர்) இத்திரைப்படத்தின் முன்னணி கதாபாத்திரமாகவும் இப்படத்தின் தயாரிப்பாளரும் ஆவார். பூர்ணாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.[4] இத்திரைப்படத்தின் வில்லன் கதாபாத்திரத்திற்கு நடிகர் அர்ஜூனை முதலில் விரும்பிய இயக்குநர் பின்னர் மதயானைக்கூட்டம் புகழ் விக்ரம் சுகுமாறனைத் தேர்வு செய்துள்ளனர்.[5][6] விதார்த் சசிக்குமாரின் மைத்துனர் வேடத்தில் நடித்துள்ளார்.[7] இத்திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மார்ச் 2017 இல் மதுரையில் தொடங்கப்பட்டுள்ளது.[8] பூர்ணா இத்திரைப்படத்திற்காக மொட்டையடித்துள்ளதாகவும், எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.[9][10][11][12][13][14] இத்திரைப்படத்தில் எஸ். ஆர். கதிர் ஒளிப்பதிவாளராகவும், என். ஆர். ரகுநந்தன் இசையமைப்பாளராகவும் பணிபுரிந்துள்ளனர்.[15]

கதை தொகு

தன் தங்கை மீது உயிரையே வைத்தபடி, அநீதிக்கு எதிராக பொங்கி எழுந்து, நல்லதையே நினைத்து, நல்லதையே செய்யும் நாயகனுக்கும், அவரை மாதிரியே, தன் தங்கை மீதும் தன் தங்கை குடும்பத்தின் மீதும் உயிரையே வைத்தபடி நீதிக்கும், நேர்மைக்கும் எதிராக அநீதிக்கு ஆதரவாக செயல்படும் வில்லனுக்கும் இடையில் ஏற்படும் அதிரடி சரவெடி தான் "கொடிவீரன்" படத்தின் கதையும், களமும். சசிக்குமார் சிறுவயதிலேயே தன் தாயை இழக்கிறார். அன்றிலிருந்து தன் தங்கைக்காகவே வாழ்கிறார். அந்த ஊரில் பசுபதி தனது தங்கை கணவருடன் சேர்ந்து கொண்டு பல நாச வேலைகளை செய்து வருகிறார். தன்னைக் காப்பாற்றிக் கொள்ள தனது பட்டாசு ஆலைக்கே தீ வைக்கும் இந்திரகுமாரை சிறையில் தள்ள ஊரின் வருவாய் துறை அலுவலராக வரும் விதார்த் முனைப்பாக செயல்படுகிறார். தனது தங்கையின் கணவரான இந்திரகுமாரை இவ்வழக்கிலிருந்து விடுவிக்க முயல்கிறார். இந்த முயற்சியில் பசுபதி தனது தங்கையின் கணவரைக் காப்பாற்றுவதற்காக கோட்டாட்சியர் விதார்த்தைக் கொல்ல சதி செய்கிறார். சசிக்குமாரின் தங்கைக்கும் விதார்த்துக்கும் திருமணம் நடக்கிறது. பசுபதி கோட்டாட்சியர் விதார்த்துக்கு பிரச்சனைகளைக் கொடுக்க தனது தங்கை கணவரின் பிரச்சனையை தனது பிரச்சனையாக எடுத்துக் கொண்டு பசுபதிக்கு எதிராக நாயகன் சசிக்குமார் களம் இறங்குகிறார். பசுபதி தனது தங்கை மீது கொண்டுள்ள பாசம் பெரிதா? சசிக்குமார் தனது தங்கை மீது கொண்டுள்ள பாசம் பெரிதா? என்பதில் கதை நகர்கிறது. பெண்களைக் கவரும் வகையில் பல காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. படத்தின் இரண்டாம் பாதியில் விதார்த்துக்கு என்ன ஆகும்? சசிக்குமார் காப்பாற்றுவாரா? என்ற பரபரப்பு தொற்றிக்கொள்கிறது.[16]

ஒலித்தொகுப்பு தொகு

இத்திரைப்படத்தில் பின்வரும் 6 பாடல்கள் இடம் பெற்றுள்ளன.[17]

எண் பாடலின் பெயர் பாடகர்(கள்) பாடலின் நீளம்
1 அய்யோ அடி ஆத்தே வந்தனா ஸ்ரீனிவாசன், ஜெகதீஸ் 4:25
2 களவானி வி. வி. பிரசன்னா, சௌந்தர்யா பாலா நந்தகுமார் 4:20
3 ரக ரக ரகளடா அய்யப்பன், ஜெகதீஸ், வேலு, சிந்துாரி, கமலஜா, லதா கிருஷ்ணா 2:02
4 அண்டம் கிடுகிடுங்க குரு, மகிதா 6:29
5 ஆத்தா சீரு குரு 1:02
6 தங்கமே உன்ன மது பாலகிருஷ்ணன் 3:10

மேற்கோள்கள் தொகு

 1. "IndiaGlitz - Sasikumar Mahima Nambiar Sanyusha new movie Kodi Veeran directed by M Muthiah - Tamil Movie News". http://www.indiaglitz.com/sasikumar-mahima-nambiar-sanyusha-new-movie-kodi-veeran-directed-by-m-muthiah-tamil-news-185198.html. 
 2. "Aishwarya Rajesh To Play A Pivotal Role In Sasikumar Starrer Kodi Veeran!". www.follo.in. பார்க்கப்பட்ட நாள் 2017-07-06.
 3. "IndiaGlitz - Sasikumar Muthiah Kodi veeran three heroines Poorna Mahima Sanusha - Tamil Movie News". http://www.indiaglitz.com/sasikumar-muthiah-kodiveeran-three-heroines-poorna-mahima-sanusha-tamil-news-186524.html. 
 4. "Poorna Is A New Addition To The Cast Of Kodi Veeran" (in en). Desimartini. http://www.desimartini.com/news/tamil/poorna-is-a-new-addition-to-the-cast-of-kodi-veeran/article53464.htm. 
 5. "‘Action King’ Arjun to lock horns with Sasikumar in Kodi Veeran?" (in en). www.hindustantimes.com/. 2017-03-23. http://www.hindustantimes.com/regional-movies/action-king-arjun-to-lock-horns-with-sasikumar-in-kodi-veeran/story-ts00c6OL5aOYzbKBPwvwnL.html. 
 6. "Vikram Sukumaran plays the baddie in Sasikumar’s Kodi Veeran" (in en). Sify இம் மூலத்தில் இருந்து 2017-11-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171107063416/http://www.sify.com/movies/vikram-sukumaran-plays-the-baddie-in-sasikumar-s-kodi-veeran-news-tamil-rggk5jefjjfec.html. 
 7. "Vidharth Roped In To Play Crucial Role In Sasikumar’s ‘Kodi Veeran’" (in en). Desimartini. http://www.desimartini.com/news/tamil/vidharth-roped-in-to-play-crucial-role-in-sasikumars-kodi-veeran/article53997.htm. 
 8. "Sasi Kumar begins his next Kodi Veeran". NOWRUNNING இம் மூலத்தில் இருந்து 2017-11-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171107020026/http://www.nowrunning.com/sasi-kumar-begins-his-next-kodi-veeran/130604/story.htm. 
 9. "Poorna goes baldpate for Kodi Veeran?" (in en). www.deccanchronicle.com/. 2017-07-06. http://www.deccanchronicle.com/entertainment/kollywood/060717/poorna-goes-baldpate-for-kodi-veeran.html. 
 10. "Poorna plays a negative role in Kodi Veeran? - Times of India". The Times of India. http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/poorna-plays-a-negative-role-in-kodi-veeran/articleshow/59436157.cms. 
 11. NYOOOZ. "Poorna goes baldpate for Kodi Veeran? | Chennai NYOOOZ". NYOOOZ. பார்க்கப்பட்ட நாள் 2017-07-06.
 12. "IndiaGlitz - Poorna to play negative role and appear bald in Kodi veeran sasikumar vidharth mahima - Tamil Movie News". http://www.indiaglitz.com/poorna-to-play-negative-role-and-appear-bald-in-kodi-veeran-sasikumar-vidharth-mahima-tamil-news-189167.html. 
 13. "Poorna tonsures head for Kodi Veeran". The New Indian Express. http://www.newindianexpress.com/entertainment/tamil/2017/jul/05/poorna-tonsures-head-for-kodi-veeran-1624298.html. 
 14. "poorna to shave off her head?" (in en). www.tollywood.net இம் மூலத்தில் இருந்து 2017-07-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170706124407/http://www.tollywood.net/topstories/poorna-to-shave-off-her-head. 
 15. Top10cinema. "Kodi Veeran gets the official release date revealed | Chennai Top10cinema". Top10cinema. Archived from the original on 2017-11-07. பார்க்கப்பட்ட நாள் 2017-10-31.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
 16. http://cinema.dinamalar.com/movie-review/2482/Kodiveeran/
 17. "Soundtrack of Kodiveeran- MovieTeT". Archived from the original on 2018-03-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொடிவீரன்&oldid=3709363" இலிருந்து மீள்விக்கப்பட்டது