மகிமா நம்பியார்

இந்திய நடிகை

மகிமா நம்பியார் என்பவர் தென்னிந்திய நடிகை ஆவார். தமிழ் மற்றும் மலையாளம் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.

மகிமா நம்பியார்
பிறப்புகாசர்கோடு, கேரளம், இந்தியா[1]
தேசியம்இந்தியன்
பணிநடிகை, மாடல், பாடகி
செயற்பாட்டுக்
காலம்
2010- தற்போது

தொடக்க கால வாழ்க்கை மற்றும் கல்வி

தொகு

கேரள மாநிலம் காசர்கோடு பகுதியிருந்து வந்தவர் இவர்.[2] 2014 இல் இளங்கலை ஆங்கில பட்டம் பெற்றார். [2] நடனம் பாடலை கற்றுள்ளார்.[3]

15 வயதில் காரியஸ்தன் என்ற மலையாள திரைப்படத்தில் நடித்தார். அதில் நடிகர் திலீப்பிற்கு சகோதரியாக நடித்தார். [2][3] இயக்குனர் சாமியின் சிந்து சமவெளி (திரைப்படம்) என்பதில் நடிக்க ஒப்பந்தமாகி விளம்பரங்கள் வெளிவந்தன. பிறகு தனிப்பட்ட காரணங்களுக்காக படத்தில் இருந்து விலகினார். சாட்டை (திரைப்படம்) (2012),[4] திரைப்படத்தில் நடிக்க தயாரிப்பு வியப்பு வலியுறுத்தியது. அறிவழகி என்ற 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியாக நடித்தார்.[2] சாட்டை திரைப்படத்திற்கு பிறகு பள்ளி படிப்பை ஒரு ஆண்டு படித்து நிறைவு செய்தார்.[5] பிறகு நான்கு திரைப்படங்களில் நடித்தார்.[6] என்னமோ நடக்குது (2014) படத்தில் மது என்ற செவிலியராக நடித்துள்ளார்.[4] மொசக்குட்டி, என்ற இயக்குனர் ஜீவன் திரைப்படத்திலும்,[7] புறவி 150சிசி, என்ற வேங்கடேஸ் இயக்கும் திரைப்படத்திலும்,[4] மருது இயக்கத்தில் ஆனந்தி படத்திலும் நடித்துள்ளார்.[2]

திரைப்படங்கள்

தொகு
ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்புகள்
2010 காரியஸ்தன் கிருஷ்ணனுன்னி சகோதரி மலையாளம்
2012 சாட்டை (திரைப்படம்) அறிவழகி தமிழ்
2014 என்னமோ நடக்குது மது தமிழ்
மொசக்குட்டி கயல்விழி தமிழ்
2015 அத்தனை தமிழ்
2017 குற்றம் 23 தென்றல் தமிழ்
புரியாத புதிர் (2017 திரைப்படம்) மிதூலா தமிழ்
கொடிவீரன் மலர் தமிழ்
மாஸ்டர்பீஸ் வேதிகா மலையாளம்
2018 இரவுக்கு ஆயிரம் கண்கள் சுசீலா தமிழ்
அண்ணனுக்கு ஜே தமிழ்
2019 மதுர ராஜா மலையாளம்
ஐங்கரன் தமிழ் படபிடிப்பு
வாடு நேனு காது தெலுங்கு மொழி படபிடிப்பு
கிட்னா அம்பிகா தமிழ்
மலையாளம்
கன்னடம்
தெலுங்கு
படபிடிப்பு
அசூர குரு தமிழ் படபிடிப்பு

ஆதாரங்கள்

தொகு
  1. https://behindtalkies.com/mahima-nambiar/
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 "Mahima Going Places in Kollywood". The New Indian Express. http://www.newindianexpress.com/entertainment/malayalam/Mahima-Going-Places-in-Kollywood/2014/06/06/article2265148.ece. பார்த்த நாள்: 27 October 2014. 
  3. 3.0 3.1 "Mahima set for a good innings in Tamil films". 30 May 2014 – via The Hindu.
  4. 4.0 4.1 4.2 "From schoolgirl to heroine roles". The New Indian Express. http://www.newindianexpress.com/entertainment/tamil/From-schoolgirl-to-heroine-roles/2013/10/31/article1864868.ece. பார்த்த நாள்: 5 May 2014. 
  5. "Directors warn me to keep quiet: Mahima Nambiar".
  6. "Etcetera: Dream come true". The Hindu. http://www.thehindu.com/features/cinema/cinema-columns/etcetera-dream-come-true/article5153524.ece. பார்த்த நாள்: 5 May 2014. 
  7. "Mahima’s challenging role in Mosakutty". Deccan Chronicle. http://www.deccanchronicle.com/140111/entertainment-mollywood/article/mahima%E2%80%99s-challenging-role-mosakutty. பார்த்த நாள்: 5 May 2014. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகிமா_நம்பியார்&oldid=3772818" இலிருந்து மீள்விக்கப்பட்டது