ஐங்கரன் (திரைப்படம்)
ஐங்கரன் (Ayngaran) என்பது 2022 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் மொழி அதிரடி நாடகத் திரைப்படமாகும். காமன் மேன் பிரசண்ட்ஸ் தயாரித்த இப்படத்தை இரவி அரசு எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தில் காளி வெங்கட், அருள்தாஸ், ஆடுகளம் நரேன், அரீஷ் பேரடி உள்ளிட்ட துணை நடிகர்களுடன் ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் மகிமா நம்பியார் ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு செய்ய, ராஜா முகமது படத்தொகுப்பு செய்ய, ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படம் படம் 5 மே 2022 அன்று திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டது, ஆனால் போதுமான திரைகள் கிடைக்காததால் வெளியீடு மே 12 க்கு ஒத்திவைக்கப்பட்டது.[1][2] மூன்று ஆண்டு தாமதத்திற்குப் பிறகு படம் வெளியானது.[3][4]
ஐங்கரன் Ayngaran | |
---|---|
இயக்கம் | இரவி அரசு |
தயாரிப்பு | பி. கணேஷ் |
கதை | இரவி அரசு |
இசை | ஜி. வி. பிரகாஷ் குமார் |
நடிப்பு | ஜி. வி. பிரகாஷ் குமார் மகிமா நம்பியார் |
ஒளிப்பதிவு | சரவணன் அபிமன்யு |
படத்தொகுப்பு | ராஜா முகமது |
கலையகம் | காமன் மேன் பிரசண்ட்ஸ் |
வெளியீடு | மே 12, 2022 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- மதிமாறனாக ஜி. வி. பிரகாஷ் குமார்
- மதுமிதாவாக மகிமா நம்பியார்
- ஏழுமலையாக காளி வெங்கட்
- அறிவுசார் சொத்து அதிகாரியாக அருள்தாஸ்
- மதிமாறனின் தந்தை பெருமாள்சாமியாக ஆடுகளம் நரேன்
- கால் துறை அதிகாரி மாணிக்கமாக ஹரீஷ் பேரடி
- மகுடியாக அபிசேக் வினோத்
- மூர்த்தியாக சித்தார்த சங்கர்
- அமைச்சராக ஜி. மாரிமுத்து
- பேருந்து பயணச்சீட்டு பரிசோதகராக ஜார்ஜ் மரியன்
- குழந்தைகள் மீட்பு துறை தலைவர் சரவண சுப்பையா
- காவல் துறை அதிகாரியாக அழகம்பெருமாள்
- அம்முக்குட்டியாக ஜதிசா
- காவல் துறை அதிகாரியாக இரவி வெங்கட்ராமன்
- பொதுப்பணிதுதுறை பணியாளராக இரயில் ரவி
- பொதுப்பணித்துறை பணியாளராக ரோபோ சந்துரு
இசை
தொகுஇப்படத்திற்கான பின்னணி இசை மற்றும் பாடல்களுக்கான இசையை இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் குமார் அமைத்தார். இதன் பாடல் தொகுப்பில் நான்கு பாடல்கள் இடம்பெற்றுள்ளன.[5]
பாடல் பட்டியில் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
1. | "டக்கரு பார்வ" | சித்தார்த் மகாதேவன், ஜி. வி. பிரகாஷ் குமார் | 3:52 | |||||||
2. | "தான் அடி" | இராஜகணபதி, அந்தோணிதாசன், வி. எம். மகாலிங்கம் | 3:26 | |||||||
3. | "தித்திப்பா" | ஜி. வி. பிரகாஷ் குமார் | 3:34 | |||||||
4. | "உயிரினும் உயர்ந்தது" | ஹரிஹரன் | 3:48 |
வெளியீடு
தொகுவரவேற்பு
தொகுஇப்படம் கலவையான விமர்சனங்களுடன் ஓடியது. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா "மொத்தத்தில், ஐங்கரன் நிச்சயமாக ஒரு தகுதியான பொருளைப் பற்றி பேசும் ஒரு படம், ஆனால் அதை இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம்" என்று எழுதியது.[6] சினிமா எக்ஸ்பிரஸ், "எளிய கண்டுபிடிப்பாளர்கள் எதிர்கொள்ளும் துரதிர்ஷ்டத்தைப் பற்றி பேசும் இந்த நல்ல எண்ணம் கொண்ட திரைப்படத்தை தோதான திருப்பங்களும் போதாமையான எழுத்துகளும் பாதிக்கின்றன" என்று கருத்து தெரிவித்தது.[7][8] பிஹைண்ட்வுட்ஸ் படத்தை 2.75/5 என மதிப்பிட்டது, "ஐங்கரன் சிறப்பான நடிப்பு மற்றும் பாத்திரங்களைக் கொண்ட படம், மூன்று துணைக்கதைகளுக்குப் பதிலாக, படத்தை ஒற்றைப் போக்கில் கொண்டு சென்றிருந்தால், இன்னும் நெகிழ்வான, இறுக்கமான திரைப்படத்தைப் பெற்றிருப்போம். ஆயினும்கூட, இறுதியில் தரும் செய்தியானது மிகவும் நேர்மையானது. ஒட்டுமொத்தமாக ஐங்கரன் நல்ல நடிப்புடன் முக்கியமான செய்தியை வழங்குகிறான்." [9]
குறிப்புகள்
தொகு- ↑ "Release of GV Prakash's Ayngaran and courtroom drama Vaaitha postponed". The Times of India (in ஆங்கிலம்). 6 May 2022. பார்க்கப்பட்ட நாள் 6 May 2022.
- ↑ "Dhanush announces GV Prakash's long-delayed 'Ayngaran' release date!". Behindwoods. 8 May 2022. பார்க்கப்பட்ட நாள் 9 May 2022.
- ↑ "G.V.Prakash to team up with director Ravi Arasu for his next". 10 November 2016.
- ↑ "Ayngaran Public Review" | GVPrakash | Director Exclusive Interview #ayngaranreview #blackshirt". Black Shirt. 13 May 2022.
- ↑ "Ayngaran". JioSaavn. 14 August 2019. பார்க்கப்பட்ட நாள் 12 May 2022.
- ↑ "Ayngaran Movie Review : Ayngaran is well-written, but could have been made better". The Times of India (in ஆங்கிலம்). 4 May 2022. பார்க்கப்பட்ட நாள் 14 May 2022.
- ↑ "Ayngaran Movie Review: A noble message doesn't absolve this film's many flaws". Cinema Express (in ஆங்கிலம்). 12 May 2022. பார்க்கப்பட்ட நாள் 14 May 2022.
- ↑ "Ayngaran Movie Review". Dinamalar. 12 May 2022. பார்க்கப்பட்ட நாள் 14 May 2022.
- ↑ "Behindwoods- Ayngaran Movie Review". Behindwoods (in ஆங்கிலம்). 12 May 2022. பார்க்கப்பட்ட நாள் 12 May 2022.