பிரேம் குமார்

தென்னிந்திய நடிகர்

பிரேம் குமார் என்பவர் ஒரு ஒரு இந்திய திரைப்பட நடிகர்.ஆவார். இவர் குறிப்பாக தமிழ் படங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துவருகிறார். இவர் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து புகழ் பெற்றவர், மேலும் ஜோடி நம்பர் ஒன் என்ற ரியாலிட்டி நடனடன நிகழ்ச்சியின் பருவம் ஒன்றில் வெற்றியாளருமாவார். 18 அக்டோபர் 2015 அன்று நடைபெற்ற தென்னிந்திய நாடிகர் சங்கத் தேர்தலில், செயற்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இரமநாதபுரத்தின் மன்னரான சண்முக ராஜேஸ்வர சேதுபதியின் பேரன் ஆவார்.

பிரேம் குமார்
பிறப்புஇந்திய ஒன்றியம், தமிழ்நாடு, சென்னை
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1996–தற்போது வரை

தொழில் தொகு

கே. பாலசந்தர் தயாரித்து, சமுத்திரக்கனி இயக்கிய அண்ணி என்ற தொலைக்காட்சித் தொடரில் பிரேம் நடிகராக அறிமுகமானார். மு. கருணாநிதி அண்ணாமலை என்ற தொலைக்காட்சி தொடரில் இவரின் நடிப்பைப் பார்த்து, கருணாநிதியின் கண்ணம்மா புதினத்தின் திரைப்பட பதிப்பில் நடிக்கவைக்க பரிந்துரைத்தார்.[1] அப்படம் 2005 இல் சராசரி விமர்சனங்களுடன் வெளியானது.[2]

இவர் ஜோடி நம்பர் ஒன்னின் பருவம் ஒன்றில் அண்ணாமலையில் தொடரில் தனது துணை நடிகையான பூஜாவுடன் கலந்துகொண்டார். பருவம் ஒன்றில் வெற்றிபெற்றார். மேலும் தொலைக்காட்சித் தொடர்களிலிருந்து திரைப்படங்களில் நடிக்கச் செல்வதாக அறிவித்தார்.[3] அதன் பின்னர் இவர் நேபாளி (2008), உன்னைப்போல் ஒருவன் (2009), வல்லக்கோட்டை (2010) உள்ளிட்ட படங்களில் நடித்தார். இவரது மைத்துனர் பாடகர் ஹரிஷ் ராகவேந்திரா ஆவார்.

திரைப்படவியல் தொகு

ஆண்டு படம் பாத்திரம் குறிப்புகள்
1996 நாட்டுப்புறப் பாட்டு வேல்பாண்டி
2005 கண்ணம்மா ஆனந்தன்
கலையாத நினைவுகள்
2007 வீராப்பு
மச்சக்காரன்
2008 நேபாளி கௌதம்
தனம் அனந்த்
கத்திக் கப்பல் பரிவள்ளல்
சேவல் பரிஜாதத்தின் மைத்துனன்
2009 ஈனாடு தெலுங்கு படம்
உன்னைப்போல் ஒருவன் ஜாக்ரியா
மூணார் சங்கர்
2010 வாடா பிரேம்
வல்லக்கோட்டை பாலா
ஹுலி கன்னட படம்
2011 குருசாமி சிறப்பு தோற்றம்
2012 நான் சிவனாகிறேன்
சாட்டை தனியார் பள்ளி பயிற்சியாளர்
2013 ஜட்டா பீம் குமார் கன்னட படம்
பிரியாணி விக்ரம்
2014 புலிவால் கௌதம்
2015 கில்லாடி தரனியின் தம்பி
36 வயதினிலே ஜெயச்சந்திரன்
2016 அகம்
தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் சிவன்
தொடரி அரவிந்த்
2017 சி3 ஆனந்த ராவ்
விக்ரம் வேதா சைமன்
கொடிவீரன் கதிர்
2018 எழுமின் ராஜசேகர்
சர்க்கார் சுந்தர் ராமசாமியின் தம்பி
2019 காப்பான் பிரேம்
சிவப்பு மஞ்சள் பச்சை ராஜசேகரின் சகோதரர்
பெட்ரோமாக்ஸ் சரவணன்
ஹீரோ காவல்துறை அதிகாரி
2020 மாஸ்டர் பிரேம்

தொலைக்காட்சி தொகு

தொடர்கள்
யதார்த்த நிகழ்சிகள்

குறிப்புகள் தொகு

 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரேம்_குமார்&oldid=3563671" இருந்து மீள்விக்கப்பட்டது