அவள் பெயர் தமிழரசி (திரைப்படம்)
அவள் பெயர் தமிழரசி என்பது 2010 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். மீரா கதிரவனின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய், நந்தகி, தியானா, சு. தியடோர் பாஸ்கரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.[1][2][3]
அவள் பெயர் தமிழரசி | |
---|---|
இயக்கம் | மீரா கதிரவன் |
தயாரிப்பு | மோசர் பாயர் |
கதை | மீரா கதிரவன் |
இசை | விஜய் ஆண்டனி |
நடிப்பு | ஜெய் நந்தகி தியானா சு. தியடோர் பாஸ்கரன் கஞ்சா கறுப்பு வீர சந்தானம் |
ஒளிப்பதிவு | பி. ஜி. முத்தையா |
படத்தொகுப்பு | ராஜா முகம்மது |
வெளியீடு | 5 மார்ச் 2010 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
திரைக்கதை
தொகுகதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
நாட்டுப்புறக் கலைகளின் நலிந்த வாழ்வைப் பின்புலமாகக் கொண்ட ஒரு காதல் கதை. தன் குடும்பத்தின் பட்டினியைப் பொருட்படுத்தாமல் தோல்ப்பாவைக் கூத்தை நடத்தி, அதைத் தன் உயிரைவிட மேலாய் நேசிக்கும் கதாபாத்திரமாக வருபவர் ஓவியர் வீர சந்தானம். கூத்தை நேசிக்கும் ஜோதியின் பால்ய கால நட்பு, வளர்பருவத்தில் காதலாகிறது. பள்ளி இறுதித் தேர்வில் மாவட்ட முதன்மை பெறுகிறாள் தமிழரசி. படிப்பில் கவனம் சிதறித் தோல்வியடைகிறான் ஜோதி. தமிழரசி தன்னை மதிக்கவே இல்லை என்கிற தாழ்வு மனப்பான்மையில் மன உளைச்சலடைகிறான். தவறான நண்பர்களின் ஆலோசனையினால் தமிழரசியைப் பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்துகிறான்.
இதன் எதிர் விளைவாகத் தமிழரசியின் படிப்பு, எதிர்காலம், கனவு என எல்லாம் தொலைந்து போகிறது. கர்ப்பமாகிறாள். தன் கர்ப்பத்திற்குக் காரணமானவனைக் காட்டிக் கொடுக்க மறுக்கிறாள். தன் தவறுக்கு வருந்தி தற்கொலைக்கு முயல்கிறான் ஜோதி. அப்போது கதவு தட்டப்படுகிறது. அவசர அவசரமாகக் கயிற்றையும், கருக்கருவாளையும் மறைத்து வைக்கிறான். அதைத் தமிழரசியின் தாய் பார்த்துவிடுகிறாள். நம்பிக்கைத் துரோகம் நுட்பமான அதிர்வாக மனதைத் தாக்குகிறது. இதன் எதிர்வினையாகத் தற்கொலை செய்துகொள்கிறாள் தமிழரசியின் அம்மா.
தன் தாயின் தற்கொலை குறித்தும், நிகழ்ந்த துரோகம் குறித்தும் குமுறி எழுகிறான் தம்பியாய் வரும் ஊனமுற்ற இளைஞன். ஜோதியை அடித்துத் துவம்சம் செய்கிறான். கண்காணாத தொலைவிற்கு சென்றுவிட்ட தமிழரசியைத் தேடி அலைந்து கண்டுபிடிக்கிறான் ஜோதி. கர்ப்பம் கலைத்து, உறவுகள் தொலைத்து, கலைகளின் பெயரால் பாலியல் தொழிலாளியாகி நிற்கிறாள் தமிழரசி. காதல் அற்றுப் போன தன் வாழ்வை அவனால் மீட்க முடியாது என்று மறுக்கிறாள். எந்தத் தவறினால் வாழ்க்கை திசை மாறியதோ அந்த ஆசையை நிறைவேற்றிக்கொண்டு போய்விடுமாறு கூறித் தன்னைத் தந்து, அவனைத் திருப்பி அனுப்புகிறாள். இருவரும் பின்னர் இணைகின்றனர்.