ஏக்கல்நத்தம்

கிருஷ்ணகிரி மாவட்ட சிற்றூர்

ஏக்கல்நத்தம் ( Ekkalnatham ) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆந்திரப் பிரதேச எல்லையை ஒட்டி உள்ள ஒரு மலை கிராமமாகும்.

ஏக்கல்நத்தம்
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருட்டிணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
635120

அமைவிடம்

தொகு

இந்த கிராமமானது கிருஷ்ணகிரி மாவட்டத்தில், வேப்பனபள்ளி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நாரலபள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமமாகும்.[1] இந்த கிராமம் நான்கு மலைகளால் சூழப்பட்ட நடுவிலுள்ள சமவெளிப்பகுதியில் அமைந்துள்ளது.

பிற தகவல்கள்

தொகு

இக்கிராமத்தில் 190 வீடுகள் உள்ளன. இங்கு நாயுடு, வன்னியர், மலைவாழ் குரவர்கள், ஆதிதிராவிடர் எனப் பலதரப்பட்ட மக்களாக 850 பேர் வாழ்கின்றனர். இவர்கள் தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளை பேசுகின்றனர். இம்மக்களின் முக்கிய உணவாக அரிசி, கேழ்வரகு, சோளம், பயறுவகைகள், பால். போன்றவை உள்ளன. விவசாயமும், கால்நடை வளர்ப்பும் முக்கிய தொழிலாக உள்ளன. குடிநீருக்ககு கிணறு, குளம், ஏரி ஆகியவை நீர்வள ஆதாரங்களாக உள்ளன. இந்த கிராமத்துக்கு செல்ல நீண்ட காலமாக சாலை வசதி இல்லாமல் இருந்து வந்தது மலைப் பகுதியில் சுமார் ஐந்து கிலோ மீட்டர் நடந்துதான் கிராமத்தை அடையமுடியும். சாலைவசதி வேண்டும் என்ற கோரிக்கையை பல காலமாக இம்மக்கள் எழுப்பிவந்தனர். மேலும் தேர்தல் புறக்கணிப்பு போன்றவற்றில் ஈடுபட்டு தங்கள் எதிர்ப்பைக் காட்டிவந்தனர். இந்திலையில் ரூ.2.50 கோடி மதிப்பில் இக் கிராமத்துக்கு 2021 ஆம் ஆண்டு சாலை அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.[2]

பள்ளி வசதி

தொகு
  1. ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மலைப் பகுதியில் செயல்பட்டுவருகிறது. நாள்தோறும் நான்கு ஆசிரியர்கள் தினமும் மலை மீது நடந்து சென்று மாணவர்களுக்கு கல்வி பயிற்றுவிக்கின்றனர்.[3]
  2. குழந்தைதொழிளாலர் பள்ளி பகுதிநேரப் பள்ளியாகச் செயல்படுகிறது.

மருத்துவ வசதி

தொகு

மருத்துவமனை 7 கிலோமீட்டர் தொலைவில் மேகலசின்னம்பள்ளியில் உள்ளது. 250 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள காட்டில் மருத்துவ குணம்கொண்ட மூலிகைகள் உள்ளன. அவற்றை மக்கள் பயன்படுத்துகின்றனர்.

திருவிழாக்கள்

தொகு

தை மாதத்தில் ஈஸ்வரன் கோவில் திருவிழா சிறப்பாக நடைபெறும். மக்கள் ஆடல்,பாடல், நடநத்துடன் மகிழ்ச்சியுடன் இவ்விழாவை கொண்டாடுகின்றனர்.

குறிப்புகள்

தொகு

துணை நூல்கள்

தொகு
  • பன்முகநோக்கில் கிருஷ்ணகிரி மாவட்டம், முனைவர் கோ. விருது, ஜோதிராஜன் பதிப்பகம், ஓசூர், 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏக்கல்நத்தம்&oldid=3597828" இலிருந்து மீள்விக்கப்பட்டது