ஏக்சல் பிரெடரிக் குரான்ஸ்டெட்

சுவீடிய கனிமவியலாளர் மற்றும் வேதியியலாளர்

ஏக்சல் பிரெடரிக் குரோன்ஸ்டெட் (Axel Fredrik Cronstedt, 23 டிசம்பர் 1722 - 19 ஆகத்து 1765) என்பவர் சுவீடன் நாட்டைச் சேர்ந்த கனிமவியலாளரும், வேதியியலாளரும் ஆவார். இவர் சுரங்கவியல் பணியகத்தில் சுரங்கவியல் நிபுணராக பணிபுரிந்து கொண்டே 1751 ஆம் ஆண்டில் நிக்கல் என்ற தனிமத்தைக் கண்டறிந்தார். குரோன்ஸ்டெட் அதை கூப்பர்நிக்கல் என்று விவரித்தார். நிக்கலுக்கான தாதுப் பொருள் செம்பின் (kupfer) தாதுப்பொருள் போலவே காணப்பட்டதாலும் அதிலிருந்து செம்பைத் தனித்துப் பிரிக்கவியலாத காரணத்தாலும் அவர் இதை கூப்பர்நிக்கல் என்று அழைத்தார். கோபால்ட்டைக் கண்டுபிடித்த ஜார்க் பிராண்ட்டின் மாணவராக குரோன்ஸ்டெட் இருந்தார். நவீன கனிமவியல் நுட்பங்களை உருவாக்கியவர்களில் ஒருவராகவும் இவர் திகழ்ந்தார்.[1]. ஊது குழாயைப் பயன்படுத்துவதில் இவர் ஒரு நடைமுறை ஆய்வுநூல் என்று தனது 1827 ஆம் ஆண்டுக் கட்டுரையில் ஜான் கிரிபின் விவரித்துள்ளார்.

ஏக்சல் பிரெடரிக் குரோன்ஸ்டெட்
Axel Fredrik Cronstedt
பிறப்புதிசம்பர் 23, 1722(1722-12-23)
இறப்புஆகத்து 19, 1765(1765-08-19) (அகவை 42)
தேசியம்சுவீடியர்
துறைவேதியியல்
கனிமவியல்
அறியப்படுவதுநிக்கல், தங்குதன் கண்டுபிடிப்பு

குரோன்ஸ்டெட் 1751 ஆம் ஆண்டில் "ஸ்கீலைட்" என்ற கனிமத்தையும் கண்டறிந்தார். இதற்கு டங்ஸ்டன் எனப் பெயரிட்டார். சுவீடனின் கனமான கல் என்பது இதன் பொருளாகும். இக்கனிமத்தில் இருந்து புதியதாக ஒரு தனிமத்தைப் பிரித்தெடுக்க இயலும் என்று பின்னாளில் காரல் வில்லெம் சீலெ பரிந்துரை செய்தார். இதுதான் தற்பொழுது டங்ஸ்டன் என்று அழைக்கப்படும் தனிமம் ஆகும்.

1753 ஆம் ஆண்டில் இராயல் சுவீடன் அறிவியல் கழகத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஸ்டிபைட் கனிமத்தை ஊதுகுழாய் சுடரின் மூலம் சூடுபடுத்திய பிறகு 1756 ஆம் ஆண்டில் குரோன்ஸ்டெட், சியோலைட் (zeolite) என்ற சொல்லை உருவாக்கினார்.

மேற்கோள்கள் தொகு

  1. Nordisk familjebok – Cronstedt: "den moderna mineralogiens och geognosiens grundläggare" = "the modern mineralogy's and geognosie's founder"

வெளி இணைப்புகள் தொகு