ஏதோன் தோட்டம்
ஏதோன் தோட்டம் (Garden of Eden, எபிரேயம் גַּן עֵדֶן, Gan ʿEdhen) என்பது ஆதியாகமத்தில் (ஆதியாகமம் 2-3) அதிகமாகவும், எசேக்கியேல் நூலிலும், எசாயா நூலிலும் மற்றும் பழைய ஏற்பாட்டில் பல இடங்களிலும் நேடியாகவும், மறைமுகமாகவும் விவிலியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒர் தோட்டமாகும்.[1] முன்பு "ஏதோன்" (Eden) என்ற பதம் அக்காதியச் சொல்லான எடினு (edinnu) என்பதிலிருந்து பெறப்பட்டு, "வெறுமை" அல்லது "பரந்த சமவெளி" எனும் அர்த்தமுடைய சுமேரிய மொழிச் சொல்லிருந்து பெறப்பட்டது என்றாலும், தற்போது இது அரமேயத்திற்கு மிகவும் நெருக்கம் உள்ளதாக "செழிப்பான, நன்கு நீரூட்டப்பட்டது" என அர்த்தம் கொள்ளப்படுகிறது என நம்பப்படுகிறது.[1] விவிலியம் ஆதாமும் ஏவாளும் ஆடையின்றி தோட்டத்தில் உலாவியதாகக் குறிப்பிடுகின்றது.[2][3]
உசாத்துணை
தொகு- ↑ 1.0 1.1 Cohen 2011, ப. 228–229
- ↑ Miller 3-in-1: Blue Like Jazz, Through Painted Deserts, Searching for God, Donald Miller - 2007
- ↑ From Adam to Noah-The Numbers Game, Leonard Timmons - 2012