ஏமாளிகள்
எஸ். இராமநாதன் இயக்கத்தில் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஏமாளிகள்- 1978ல் திரையிடப்பட்ட ஈழத்து தமிழ்த் திரைப்படமாகும். கோமாளிகள் பெற்ற வரவேற்பைத் தொடர்ந்து எஸ். ராம்தாஸ் கதை, வசனம் எழுதி வெளியிட்ட இரண்டாவது படம்.
ஏமாளிகள் | |
---|---|
இயக்கம் | எஸ். இராமநாதன் |
தயாரிப்பு | ஏ. எல். எம். மவுஜூட் |
கதை | எஸ். ராம்தாஸ் |
இசை | கண்ணன் - நேசம் |
நடிப்பு | என். சிவராம் ஹெலன்குமாரி ராஜலட்சுமி ரி. ராஜகோபால் எஸ். செல்வசேகரன் கே. ஏ. ஜவாஹர் டொன் பொஸ்கோ செல்வம் பெர்னாண்டோ எஸ். ஜேசுரட்ணம் இரா பத்மநாதன் மணிமேகலை |
ஒளிப்பதிவு | ஜே. ஜே. யோகராஜா |
படத்தொகுப்பு | எஸ். இராமநாதன் |
விநியோகம் | பாக்கீர் பிலிம்ஸ் |
வெளியீடு | 1978 |
நாடு | இலங்கை |
மொழி | தமிழ் |
என். சிவராம், ஹெலன் குமாரி, எஸ். ராம்தாஸ், ரி. ராஜகோபால், எஸ். செல்வசேகரன், ராஜலட்சுமி முதலியோர் நடித்த இத்திரைப்படத்தை, "கோமாளிகளை" இயக்கிய எஸ். இராமநாதனே இயக்கினார். கண்ணன் - நேசம் இசையில், ஈழத்து ரத்தினமும், பெளசுல் அமீரும் இயற்றிய பாடல்களை ஜோசப் ராசேந்திரன், கலாவதி, ஸ்ரனி சிவானந்தன் ஆகியோர் பாடினார்கள்.
குறிப்பு
தொகு- எஸ். ராம்தாஸ் எழுதி தனது நாடகக் குழுவான "கொமடியன்ஸ்" மூலமாக பலமுறை மேடையேற்றிய "காதல் ஜாக்கிரதை" என்ற மேடை நாடகத்தின் திரை வடிவம் தான் "ஏமாளிகள்".
- ஜோசப் ராசேந்திரன் - கலாவதி பாடிய " வான் நிலவு தோரணம்" என்ற பாடல் பிரபலம் பெற்றது.