கோமாளிகள்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கோமாளிகள் 1976இல் வெளிவந்த ஓர் ஈழத்துத் திரைப்படம் ஆகும். இலங்கை வானொலியில் ஒலிபரப்பப்பட்ட புகழ் பெற்ற கோமாளிகள் கும்மாளம் என்ற வானொலித்தொடர் நாடகமே கோமாளிகளாக திரைப்படமாக்கப்பட்டது. எஸ். ராம்தாஸ் எழுதிய இந்த தொடர் நாடகத்தில் நடித்தவர்களில் சிலர் திரைப்படத்திலும் நடித்தார்கள். புதிய கதாபாத்திரங்களும் திரைப்படத்திற்கென உருவாக்கப்பட்டன.
கோமாளிகள் | |
---|---|
இயக்கம் | எஸ். ராமநாதன் |
தயாரிப்பு | எம். முகம்மது |
கதை | எஸ். ராம்தாஸ் |
இசை | கண்ணன் - நேசம் |
நடிப்பு | எஸ். ராம்தாஸ் ரி. ராஜகோபால் பி.எச். அப்துல் ஹமீட் சுப்புலட்சுமி காசிநாதன் சில்லையூர் செல்வராஜன் கமலினி செல்வராஜன் ஆனந்தராணி பாலேந்திரா (இராசரட்னம்) எஸ். ஜேசுரட்னம் கே. சந்திரசேகரன் கே. ஏ. ஜவாஹர் |
ஒளிப்பதிவு | ஜே. ஜே. யோகராஜா |
படத்தொகுப்பு | எஸ். இராமநாதன் |
வெளியீடு | 1976 |
நாடு | இலங்கை |
மொழி | தமிழ் |
எஸ். ராம்தாஸ், ரி. ராஜகோபால், எஸ். செல்வசேகரன், அப்துல் ஹமீட், கே. சந்திரசேகரன், சுப்புலட்சுமி காசிநாதன், ஆனந்தராணி பாலேந்திரா (இராசரத்தினம்), சில்லையூர் செல்வராஜன், கமலினி செல்வராஜன், கே. ஏ. ஜவாஹர் போன்ற பலர் நடித்தார்கள். முக்கிய கதாபாத்திரங்கள் ஏற்கனவே வானொலி மூலம் பிரபலமாக இருந்தது இத்திரைப்படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. சிறந்த படத்தொகுப்பாளராக சிங்களப்படங்களில் பணியாற்றிய எஸ். ராமநாதன் இத்திரைப்படத்தின் இயக்குனராவார்.
யாழ்ப்பாணத்தில் பிரபல இசைக்குழுவான கண்ணன் இசைக்குழுவைச் சேர்ந்த எம். கண்ணன், கொழும்பில் பிரபலமான டிறம் வாத்தியக்கலைஞரான நேசம் தியாகராஜா இருவரும் இணந்து இசை அமைத்தார்கள். சில்லையூர் செல்வராஜன், சாது, பெளசுல் அமீர் ஆகியோர் இயற்றிய பாடல்களை, மொஹிதீன் பெக், வி. முத்தழகு, கலாவதி, சுஜாதா, ராம்தாஸ் ஆகியோர் பாடினார்கள்
படம் பிறந்த கதை
தொகுஇலங்கை வானொலியில் ஒலிபரப்பப்பட்ட கோமாளிகள் கும்மாளம் என்னும் தொடரை வாரந்தோறும் விரும்பிக்கேட்ட வானொலி நேயரான எம். முகம்மது என்னும் வணிகர், இதனைத் திரைப்படமாக எடுக்க முடிவுசெய்தார். எஸ். ராமதாசிடம் தன் எண்ணத்தைக் கூற அவரும் ஒத்துக்கொள்ள படம் எடுக்கத்தொடங்கினர்.
நாற்பத்தைந்து நாட்களில் எடுத்து முடிக்கப்பட்ட இத்திரைப்படம் 1976 நவம்பர் 22ஆம் தேதி வெளியிடப்பட்டது. இலங்கையில் கொழும்பு பிளாசா திரையரங்கு (55 நாட்கள்), கொழும்பு செல்லமகால் திரையரங்கு (76 நாட்கள்), யாழ்ப்பாணம் (76 நாட்கள்), திருகோணமலை (76 நாட்கள்), மட்டக்களப்பு (76 நாட்கள்) ஆகிய இடங்களில் திரையிடப்பட்ட இப்படம் வெற்றிப்படமாக அமைந்தது.
கதை
தொகுகுறிப்பு
தொகு- சிங்களத் திரைப்படங்களில் பின்னணி பாடிய மொஹிதீன் பேக் முதன்முதலாக தமிழ்த் திரைப்படத்தில் பாடியது இத்திரைப்படத்தில் தான்.
- 1995 இல் வெளியான மணிரத்தினத்தின் பம்பாய் திரைப்படத்தில், பிறப்பால் இசுலாமியரான நடிகர் நாசர் ஒரு இந்துவாகவும், இந்துவான நடிகர் சிட்டி இசுலாமியராகவும் நடித்தது சிறப்பாக பேசப்பட்டது. ஆனால் ஏற்கனவே 1976 இல் வெளியான கோமாளிகள் திரைப்படத்தில் இசுலாமியரான பி. எச். அப்துல் ஹமீத் இந்துவாகவும், பிறப்பால் இந்துவான எஸ். ராம்தாஸ் இசுலாமியராக அதாவது "மரிக்காராக"வும் நடித்திருந்தார்கள்.