ஏழாம் ஸ்தேவான் (திருத்தந்தை)
திருத்தந்தை ஏழாம் ஸ்தேவான் (?– 15 மார்ச் 931), பிறப்பால் ஒரு உரோமர் ஆவார்.[1] இவர் கப்ரியேலி (Gabrielli) குடும்பத்தினராக இருந்திருக்கக் கூடும். துஸ்குலானி குடும்ப மோரிசாவினால் இவர் திருப்பீடத்திற்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கக் கூடும். திருத்தந்தையாவதற்கு முன் இவர் புனித அனஸ்தாசியாவின் கர்தினால் குருவாக இருந்தார்.
ஏழாம் ஸ்தேவான் | |
---|---|
![]() | |
ஆட்சி துவக்கம் | டிசம்பர் 928 |
ஆட்சி முடிவு | 15 மார்ச் 931 |
முன்னிருந்தவர் | ஆறாம் லியோ |
பின்வந்தவர் | பதினொன்றாம் யோவான் |
பிற தகவல்கள் | |
இயற்பெயர் | Stephanus de Gabrielli ??? |
பிறப்பு | ??? உரோமை நகரம், இத்தாலி |
இறப்பு | 15 மார்ச் 931 ??? |
ஸ்தேவான் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள் |
தமது ஆட்சியில் இவர், இத்தாலி மற்றும் பிரான்சு நாடுகளில் இருந்த பல மடங்களின் உரிமைகளை நிலைநாட்டினார்.
இவரது தேர்வின் செல்லத் தகுநிலை சர்ச்சைக்குரியது. ஏனெனில் இவரது முன்னோரான திருத்தந்தை ஆறாம் லியோவைப் போலவே திருத்தந்தை பத்தாம் யோவான் உயிரோடு இருக்கும் போதே இவர் தெரிவு செய்யப்பட்டார்.
மேற்கோள்கள்தொகு
- ↑ "Stephen VII". 2017-02-01 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-06-05 அன்று பார்க்கப்பட்டது.