ஏழு அப்போஸ்தலர்களின் தேவாலயம்
ஏழு திருத்தூதர்களின் தேவாலயம் (எபிரேயம்: כנסיית השליחים, Knessiath haShlichim; கிரேக்கம்: Εκκλησία Αποστόλων இசுரேலில் கப்பர்நாகுமுக்கு அருகில் கலிலேய கடற்கறையில் அமைந்துள்ள ஓர் கிரேக்க மரபுவழி திருச்சபையின் ஆலயமாகும்.
ஏழு திருத்தூதர்களின் தேவாலயம் | |
---|---|
![]() | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | ![]() |
புவியியல் ஆள்கூறுகள் | 32°52′55″N 35°34′38″E / 32.88184°N 35.577335°E |
சமயம் | கிரேக்க மரபுவழி திருச்சபை |
கட்டிடக்கலை தகவல்கள் | |
நிறைவுற்ற ஆண்டு | 1931[1] |
அளவுகள் | |
குவிமாடம்(கள்) | 7 |
முக்கியத்துவம்தொகு
இத் தேவாலயம் கிறிஸ்தவத்தில் முக்கிய இடமான புராதன கப்பர்நாகும் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. இக் கிராமம் அடிக்கடி நற்செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. கலிலேயா பணியின்போது இயேசுவின் பிரதான தளமாக இது இருந்தது. இது இயேசுவின் சொந்த நகர் எனவும் அவர் வாழ்ந்த இடம் எனவும் விவிலியத்தில் குறிப்பிடப்படுகிறது. இயேசுவின் முதல் போதனை இங்கிருந்த யூதரின் தொழுகைக்கூடத்தில் துவங்கியது.[2]
இத் தேவாலயம், யோவான் நற்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள ஏழு திருத்தூதர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.[3]