ஏழு கிணறு
எழுகிணறு (Seven Wells) என்பது சென்னை நகரத்தின் வள்ளளார் நகர் பகுதியில் (பழைய பெயர் பெத்தநாயக்கன் பேட்டை) உள்ள ஒரு பழமையான பகுதி ஆகும். இப்பகுதியில் ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட ஏழு கிணறுகள் உள்ளதால், இது இப்பெயர் பெற்றது.
வரலாறு
தொகுசென்னைக்குத் தேவைப்பட்ட தண்ணீர் தேவைக்காக 1772 ஆம் ஆண்டு பேகர் எனும் ஆங்கிலேயத் தளபதியால் இக்கிணறுகள் நிர்மாணிக்கப்பட்டன. இதில் உள்ள தண்ணீரைக் கொண்டு, அவர் அரசாங்கத்துடன் செய்த ஒப்பந்தப்படி சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுமார் 6,000 பேரின் தண்ணீர் தேவையை ஏழு வருடங்களுக்குத் தீர்த்தார். 1782 ஆம் ஆண்டு இந்த ஏழு கிணறு தண்ணீர் சேவையை கிழக்கிந்திய அரசாங்கம் 10,500 ரூபாய் விலைக்கு வாங்கிக்கொண்டது.
பதினாறு அடி விட்டத்தில் 23 முதல் 29 அடி வரையிலான ஆழத்தில் மொத்தம் பத்துக் கிணறுகள் வெட்டப்பட்டன. அந்தப் பத்துக் கிணறுகளில் மூன்றில் போதுமான தண்ணீர் இல்லாததால் அவை கைவிடப்பட்டு, ஏழு கிணறுகள் மட்டுமே எஞ்சின. இதனால் அதன் பெயரும் ஏழு கிணற்றுத் தண்ணீர் சேவை என்றானது. இந்த ஏழு கிணறுகளில் ஒரு கிணற்றில் இருந்து இன்றும் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது.[1]
இந்த ஏழு கிணறுக்கு அருகில் இருக்கும் வீராசாமி தெருவில் இராமலிங்க அடிகளாரின் நினைவு இல்லம் உள்ளது. அதில் இராமலிங்க அடிகளார் 33 ஆண்டுகள் வாழ்ந்தார்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ முகமது ஹுசைன் (21 ஏப்ரல் 2018). "ஏழு கிணறுகள்". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 21 ஏப்ரல் 2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ "வள்ளலார் நினைவு இல்லம்; அரசு கொடுத்த வாக்கை நிறைவேற்ற வேண்டும்: ராமதாஸ்". செய்தி. விகடன். 23 சனவரி 2018. பார்க்கப்பட்ட நாள் 21 ஏப்ரல் 2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)
வெளியிணைப்புகள்
தொகு- The story of Seven Wells ஆகஸ்டு 26, 2009, டைம்ஸ் ஆப் இந்தியா