ஏவ்சு தீவு
ஏவ்சு தீவு (Aves Island) என்பது அந்தமான் தீவுகளில் உள்ள ஒரு தீவு ஆகும். இந்தியாவின் ஒன்றியப் பகுதிகளில் ஒன்றான அந்தமான் நிக்கோபார் தீவுகள் நாட்டின் வடக்கு மற்றும் மத்திய அந்தமான் மாவட்ட நிர்வாகத்திற்கு உட்பட்ட பகுதியாகும்[1]. அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தலைநகரம் போர்ட் பிளேரில் இருந்து வடக்காக 140 கிலோமீட்டர் தொலைவில் ஏவ்சு தீவு அமைந்துள்ளது.
புவியியல்
தொகு12° 54′ 54″ வடக்கு மற்றும் 92° 56′ 6″ கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில், மாயாபந்தர் நகரத்திற்கு கிழக்கே 3.5 கிலோமீட்டர் தொலைவில் ஏவ்சு தீவு அமைந்துள்ளது. ஏவ்சு கலங்கரை விளக்கம் 2008 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது[2].
நிர்வாகம்
தொகுதென்னை சாகுபடி கூட்டுறவு சங்கத்திற்கு.[3]. சொந்தமான ஏவ்சு தீவு மாயாபந்தர் தாலுக்கா நிர்வாகத்தின் கீழுள்ள ஒரு பகுதியாக இயங்குகிறது [4]
போக்குவரத்து
தொகுமாயாபந்தர் நகரத்திலிருந்து 20 நிமிடப் படகுப் பயணத் தூரத்தில் ஏவ்சு தீவு அமைந்துள்ளது [3].
சுற்றுலா
தொகுதடித்த தென்னை மரங்களின் நிழலில், நீர் மற்றும் சூரிய ஒளியில் நினைவதற்கும் உல்லாசமாக காற்று வாங்கவும் [5]ஏற்ற ஒரு இடமாக ஏவ்சு தீவு இருக்கிறது.
மக்கள் தொகையியல்
தொகுஇத்தீவுகளில் உள்ள ஒரேயொரு கிராமத்தில் ஒரு குடும்பம் மட்டுமே வசிக்கிறது. எழுத்தறிவு சதவீதம் 100% ஆகும். [6]
மொத்தம் | ஆண்கள் | பெண்கள் | |
---|---|---|---|
மக்கள்தொகை | 2 | 2 | 0 |
விவசாயம் செய்து வரும் இவர்கள் நெல், காய்கறிகள், தென்னை தோட்டப்பயிர்கள், மலை தோட்டப்பயிர்கள் முதலியவற்றைப் பயிடுகின்றனர் [7] [8].
மேற்கோள்கள்
தொகு- ↑ "Village Code Directory: Andaman & Nicobar Islands" (PDF). Census of India. பார்க்கப்பட்ட நாள் 2011-01-16.
- ↑ "Government of India, Directorate General of Lighthouses and Lightships". www.dgll.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2016-10-18.
- ↑ 3.0 3.1 [1]
- ↑ "DEMOGRAPHIC – A&N ISLANDS" (PDF). andssw1.and.nic.in. Archived from the original (PDF) on 2017-08-28. பார்க்கப்பட்ட நாள் 2016-09-23.
- ↑ Video
- ↑ 6.0 6.1 "District Census Handbook - Andaman & Nicobar Islands" (PDF). 2011 Census of India. Directorate of Census Operations, Andaman & Nicobar Islands. Archived from the original (PDF) on 2015-08-01. பார்க்கப்பட்ட நாள் 2015-07-21.
- ↑ "crops" (PDF). Archived from the original (PDF) on 2016-12-21. பார்க்கப்பட்ட நாள் 2017-02-02.
- ↑ guide