வடக்கு மற்றும் மத்திய அந்தமான் மாவட்டம்
வடக்கு மற்றும் மத்திய அந்தமான் மாவட்டம் என்பது இந்தியாவின் ஒன்றியப் பகுதியான அந்தமான் நிக்கோபார் தீவுகளின் மூன்று மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைநகரமாக மாயாபந்தர் நகரம் விளங்குகிறது. இதன் மொத்த பரப்பளவு 3251.85 சதுர கி.மீ.
வரலாறு
தொகுஇது முன்னர் இருந்த அந்தமான் மாவட்டத்தைப் பிரித்து உருவாக்கப்பட்டது. ஆகஸ்டு 18, 2006 அன்று இப்பிரிப்பு நிகழ்ந்தது.[1]
புவிப் பரப்பு
தொகுஇது 3,227 சதுர கிலோமீட்டர்கள் (1,246 sq mi) பரப்பளவைக் கொண்டது.[2]
மக்கள்
தொகு2001 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, 105, 539 மக்கள் இங்கு வசிக்கின்றனர்.[3]. இங்குள்ள மக்களின் எண்ணிக்கையைக் கொண்டு கணக்கிட்டால், சதுர கி.மீட்டருக்கு 32 பேர் வாழ்கின்றனர். பால் விகிதத்தில் ஆயிரம் ஆண்களுக்கு 925 பெண்கள் உள்ளனர்.[3]. இங்குள்ளோரின் கல்வியறிவு சதவீதம் 84.25% ஆகும்.[3] இங்குள்ளோரில் பெரும்பாலானோர் வங்காளிகள் ஆவர்.
பொருளாதாரம்
தொகுஇங்கு 6500 எக்டேர் பரப்பளவில் நெல் பயிரிடுகின்றனர். 3600 எக்டேர்களில் தென்னையும், 650 எக்டேரில் வாழையும் பயிரிடுகின்றனர்.[4]
பிரிவுகள்
தொகுஇதில் திக்லிபுர், மாயாபந்தர், ரங்காத் உள்ளிட்ட வட்டங்கள் உள்ளன.
இவற்றையும் காண்க
தொகுசான்றுகள்
தொகு- ↑ Law, Gwillim (2011-09-25). "Districts of India". Statoids. பார்க்கப்பட்ட நாள் 2011-10-11.
- ↑ Srivastava, Dayawanti et al. (ed.) (2010). "States and Union Territories: Andaman Islands: Government". India 2010: A Reference Annual (54th ed.). New Delhi, India: Additional Director General, Publications Division, Ministry of Information and Broadcasting (India), Government of India. pp. 1208. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-230-1617-7. பார்க்கப்பட்ட நாள் 2011-10-11.
{{cite book}}
:|last1=
has generic name (help) - ↑ 3.0 3.1 3.2 "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
- ↑ Government of India (2011), Andaman and Nicobar Islands Statistical Hand-Book - North and Middle Andaman, 2007-08 To 2009-10
இணைப்புகள்
தொகு- அரசு இணையத்தளம் பரணிடப்பட்டது 2011-06-06 at the வந்தவழி இயந்திரம்