ஏ.பி.ஐ ஒப்படர்த்தி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஏபிஐ ஒப்படர்த்தி (API Gravity) என்பது ஒரு பாறைநெய் நீர்மமானது நீரோடு ஒப்பிடுகையில் எவ்வளவு கனமாக அல்லது இலேசாக (நொய்ம்மையாக) இருக்கிறது என்று அளவிடும் ஒரு அளவையாகும். இது அமெரிக்கப் பெற்றோலியக் கழகத்தின் ஆங்கிலப் பெயரான American Petroleum Institute என்பதன் சுருக்கப் பெயரான ஏபிஐ (API) ஐ முன்னொட்டாகக் கொண்டுள்ளது.
ஒரு பாறைநெய்யின் ஏபிஐ ஒப்படர்த்தி எண் பத்துக்கும் மேல் (API > 10) இருக்குமானால் அது நீரை விட இலேசாக இருக்கும்; நீரின் மேலே மிதக்கும் தன்மையுடையதாய் இருக்கும். இவ்வெண் பத்துக்கும் குறைவாக (API < 10) இருக்குமானால், இதற்குரிய பாறைநெய் நீரை விடக் கனமாக அமைந்து நீரில் கலக்கும் போது மிதக்காமல் மூழ்கும் தன்மையுடையதாய் இருக்கும். ஆக, ஏபிஐ ஒப்படர்த்தி என்பது ஒரு பாறைநெய் நீர்மத்தையும் நீரையும் அவற்றின் அடர்த்தியைக் கொண்டு ஒப்பிடும் அளவையாகும். பொதுவாக நீரினோடு ஒப்பிட அல்லாமல், பலவிதப் பாறைநெய் நீர்மங்களை ஒன்றினோடு ஒன்று ஒப்பிட இது பயன்படுத்தப் படுகிறது.
ஒரு பாறைநெய் நீர்மம் இன்னொன்றின் மீது மிதக்கிறது எனில், மிதக்கும் நெய்யின் ஏபிஐ ஒப்படர்த்தி அதிகமாக இருக்கும். அதோடு அது குறைந்த அடர்த்தியைக் கொண்டிருக்கும். ஒரு வகையில் இது ஒப்படர்த்தி வகையைச் சேர்ந்த பண்பே. ஏபிஐ ஒப்படர்த்தி நீர் ஒப்படர்த்திக்கு நேரெதிர் உறவைக் கொண்டிருக்கும். அதாவது, நீர் ஒப்படர்த்தி அதிகமாக அதிகமாக ஒரு பொருள் கனமாக அமைவதற்கு எதிராய், ஏபிஐ ஒப்படர்த்தி அதிகமாக அதிகமாக அப்பொருள் இலேசானதாக அமையும்.
கணித அடிப்படையில் ஏபிஐ ஒப்படர்த்தி ஓர் எண் மட்டுமே. அதற்குப் பண்பு அலகுகள் கிடையாது. எனினும் பொதுப் பயன்பாட்டில் டிகிரி (பாகை) என்னும் அலகு பயன்படுத்தப் படுகிறது. ஏபிஐ ஒப்படர்த்தி நீரியமானி (hydrometer) என்னும் கருவி கொண்டு அளக்கப்படுகிறது. பெரும்பாலான நீர்மங்கள் 10இலிருந்து 70க்குள் ஏபிஐ ஈர்ப்பு கொண்டிருக்கும்படி இதன் பாகைகள் வடிவமைக்கப் பட்டிருக்கும்.
ஏபிஐ ஒப்படர்த்திச் சூத்திரங்கள்
தொகுஏபிஐ ஒப்படர்த்தியைக் கணிக்கப் பாவிக்கப்படும் சூத்திரங்கள் கீழ்வருமாறு:
மாறாக, பாறைநெய் நீர்மங்களின் நீர் ஒப்படர்த்தி (specific gravity) ஐக் கணிக்க: