ஏ. ஆர். ரைஹானா
ஏ. ஆர். ரைஹானா ( A. R. Reihana) இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி மற்றும் திரைப்பட பெண் இசையமைப்பாளர் ஆவார்.[1] இவர் ஏ.ஆர்.ரஹ்மானின் மூத்த சகோதரியும் ஜி. வி. பிரகாஷ் குமார், மற்றும் பவானி ஸ்ரீ ஆகியோரின் தாயுமாவார். இவரது முதல் பாடல் மாதேஷ் தயாரித்து வெங்கடேஷ் இயக்கிய சாக்லேட் திரைப்படத்திலிருந்து மல்லே மல்லே தேவாவின் இசையில் பாடினார். 2005 ஆம் ஆண்டில் விருது பெற்ற கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தின் பின்னணி இசையில் இவருடைய தம்பி ஏ.ஆர்.ரஹ்மானுடன் ஒரு பாடலில் இணைந்து பணியாற்றினார். இவர் சமீபத்தில் மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை திரைப்படத்தில் சரட்டு வண்டியில பாடலைப் பாடினார். மேலும் சிவாஜி படத்தில் எஸ். பி. பாலசுப்பிரமணியம் மற்றும் பென்னி தயாளுடன் இணைந்து பல்லேலக்கா பாடலைப் பாடினார். கன்னடம் மற்றும் தெலுங்கில் பல்வேறு பாடல்களையும் பாடியுள்ளார். இவர் 6 க்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். மலையாளத் திரைப்படமான வசந்தத்தின் கனல் வாழ்க்கையில் ஒரு பாடலுக்கு இசையமைத்துள்ளார்.[2][3]. இவர் மதுரை குமரன் சில்க்ஸ், சுகுணா மோட்டார்கள்,டாஸ்லர் நைல் பாலிஸ் போன்ற பல்வேறு நிறுவனங்களுக்கு ஜிங்கில்ஸை அமைத்திருக்கிறார். இவர் 'ரையின்ட்ராப்ஸ்' என்று ஓர் இளைஞர் சார்ந்த சமூக அமைப்பின் நல்லெண்ணத் தூதராக இருக்கின்றார்.
ஏ. ஆர். ரைஹானா | |
---|---|
பிறப்பு | மெட்ராஸ், மதராஸ் மாகாணம், இந்தியா (தற்பொழுது தமிழ்நாடு, இந்தியா) |
பணி | பின்னணிப் பாடகி, இசையமைப்பாளர், தயாரிப்பாளர் |
பெற்றோர் | ஆர். கே. சேகர் கரீமா பேகம் |
வாழ்க்கைத் துணை | ஜி. வெங்கடேஷ் |
பிள்ளைகள் | ஜி. வி. பிரகாஷ் குமார் பவானி ஸ்ரீ |
உறவினர்கள் | ஏ. ஆர். ரகுமான் (தம்பி) இஸ்ரத் கட்ரி (சகோதரி) பாத்திமா சேகர் (சகோதரி) |
திரைப்படவியல்
தொகுஒரு பாடகராக
தொகு- "மதுரை ஜில்லா" - ஸ்ரீ
- "விடைகோடு எங்கள்" - கன்னத்தில் முத்தமிட்டால்
- "மல்லே மல்லே" - சாக்லேட்
- "ஆஹா தமிழம்மா" - கண்களால் கைது செய்
- "பார்த்தாலே பரவசம்" - பார்த்தாலே பரவசம்
- "பல்லேலக்கா " - சிவாஜி: தி பாஸ்
- "கெடா கரி" - ராவணன்
- "நான் ஏன்" - எம்டிவி (2013) இல் கோக் ஸ்டுடியோ (சீசன் 3 )
- "என்னிலே மகா ஒலியோ" - கோக் ஸ்டுடியோ (சீசன் 3) எம்டிவி (2013)
- "கர்ம வீரன்" - " கோச்சடையான் "
- "புத்தம் புதிதாய்" - "கடைசி பக்கம் (வரவிருக்கும் படம்)"
- "சாரட்டு வண்டியில" - காற்று வெளியிடை
- "மோரேத்துக்குச்சிந்தி" - செல்லியா
ஓர் இசையமைப்பாளராக
தொகு- மச்சி (2004)
- ஆடாத ஆட்டமெல்லாம் (2009)
- பேசுவது கிளியா (2009)
- கடலகி (2010)
- என்னை ஏதோ செய்து விட்டாய் (2011)
- மஞ்சோட்டிலே வீடு (2012)
- வசந்தத்தின் கனல் வழிகளில் (2014)
- புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம் (2015)
- கடைசி பக்கம் (2015)
- ஏண்டா தலையில எண்ண வெக்கல (2018)
தயாரிப்பாளராக
தொகு- ஏண்டா தலையில எண்ண வெக்கல - (2018)
மேற்கோள்கள்
தொகு- ↑ "திரையிசையில் பெண்கள்".[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "AR Reihana turns producer" (in en). www.deccanchronicle.com/. 2016-07-28. https://www.deccanchronicle.com/entertainment/kollywood/280716/ar-reihana-turns-producer.html.
- ↑ "G.V. Prakash's mom becomes producer for a funny titled films - Tamil Movie News - IndiaGlitz.com". IndiaGlitz.com. https://www.indiaglitz.com/a-r-reihana-producing-new-movie-yenda-thalaikku-ennai-theykala-tamil-news-164069.
வெளி இணைப்புகள்
தொகு- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் ஏ. ஆர். ரைஹானா
- Interview with Kamla Bhatt for NDTV: I knew Rahman would go international: Reihana
- Joint Scene India entry: A.R. Reihana