ஏ. எசு. பன்னீர்செல்வன்
ஏ. எசு. பன்னீர்செல்வன் (A. S. Panneerselvan) என்பவர் இதழாளர், பத்தி எழுத்தாளர் ஆவார். ஆங்கில செய்தித்தாள் தி இந்துவில் வாசகர்களின் ஆசிரியர் என்னும் பொறுப்பில் இருந்து வருகிறார். பன்னாட்டு மற்றும் தேசிய இதழ்களில் கட்டுரைகள் இருநூற்றுக்கும் மேலாக எழுதியுள்ளார்.[1]
செயல்பாடுகள்
தொகுமனவியல் கல்வியில் முதுநிலைப் பட்டம் பெற்ற பன்னீர்செல்வன் 1984 இல் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டு கொழும்பு, யாழ்ப்பாணம், அம்பாறை முதலிய பகுதிகளிலிருந்து அங்குள்ள நிலைமைகள் குறித்து செய்தித் தொகுப்புகளை அனுப்பினார். இதனால் இலங்கையில் வாழும் மக்கள் நிலைமைகளை இந்தியாவிலும் உலக நாடுகளிலும் அறிய முடிந்தது.
பொறுப்புகளும் பதவிகளும்
தொகு1998 இல் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் ராய்ட்டர் பெல்லோ பட்டம் பெற்றார். அவுட்லுக் என்னும் ஆங்கில கிழமை இதழில் பணிசெய்த பின் சன் நெட் ஒர்க் நிறுவனத்தில் சேர்ந்தார். அதில் மேலாண்மை இயக்குநர் பொறுப்பில் இருந்தார். பனோஸ் தென் ஆசியா நிறுவனத்தில் செயல் இயக்குநராகவும் ஊடக வளர்ச்சி உலக மன்றத்தில் செயல்குழு உறுப்பினராகவும் ஐ சி எப் ஜே என்னும் பன்னாட்டு இதழ் நிறுவனத்தில் ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் இருந்து வருகிறார். சென்னையில் உள்ள ஆசியப் பத்திரிக்கை கல்லூரியில் கற்பிக்கும் ஆசிரியராகவும் இருக்கிறார். பிரண்டுலைன் ஆங்கில இதழின் முயற்சியில் பிள்ளையார் சதுர்த்தியை முன்னிட்டு மக்களை ஈடுபடுத்தல் நோக்கில் ஒரு வீடியோ படத்தைப் பன்னீர்செல்வன் உருவாக்கினார். அமெரிக்க இங்கிலாந்து போன்ற நாடுகளில் பயணம் செய்து விரிவுரைகள் ஆற்றியுள்ளார்.
சான்றாவணம்
தொகுமேலும் பார்க்க
தொகுhttp://www.thehindulfl.com/speakers/as-panneerselvam-readers-editor-of-the-hindu பரணிடப்பட்டது 2016-07-23 at the வந்தவழி இயந்திரம்