ஏ. எஸ். எம். அப்துர் ரப்
ஏ. எஸ். எம். அப்துர் ரப் (A. S. M. Abdur Rab) (பிறப்பு 1945) வங்காளதேச அரசியல்வாதி ஆவார்.[1] இவர் ஜாதியா சமாஜ்தாந்த்ரிக் தளத்தின் நிறுவனரும் பொதுச்செயலாளரும் ஆவார்.[1] 1985 ஆம் ஆண்டில், ரப் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியை விட்டு வெளியேறி, ஜே. எஸ். டி (ரப்) என்று அழைக்கப்படும் ஜாதியா சமாஜ்தாந்த்ரிக் தள்-ஜே. எஸ், என்ற புதிய கட்சியை உருவாக்கினர்.[2] ஷேக் ஹசீனாவின் முதல் அமைச்சரவையில் போது லட்சுமிபூர்-4 இலிருந்து வங்காளதேச நாடாளுமன்றத்தின் உறுப்பினராகவும், கப்பல் போக்குவரத்து அமைச்சராகவும், பின்னர் மீன்வளம் மற்றும் கால்நடை அமைச்சராகவும் பணியாற்றினார்.[3]
ஏ. எஸ். எம் அப்துர் ரப் | |
---|---|
நவம்பர் 2018-இல் அப்துர் ரப் | |
வங்க தேசத்தின் 3-ஆவது எதிர்க்கட்சித் தலைவர் | |
பதவியில் 3 மார்ச்சு 1988 – 27 பெப்ரவரி 1991 | |
குடியரசுத் தலைவர் | உசேன் முகமது எர்ஷாத் சகாபுதீன் அகமது |
பிரதமர் | மௌதூது அகமது காசி சாஃபர் அகமது |
முன்னையவர் | சேக் அசீனா |
பின்னவர் | சேக் அசீனா |
கப்பல் துறை அமைச்சர் | |
பதவியில் 1999–2001 | |
பிரதமர் | காலிதா சியா |
முன்னையவர் | எம். கே. அன்வர் சையது மன்சூர் இலாஹி (acting) |
பின்னவர் | சையது மன்சூர் இலாஹி (acting) அக்பர் உசைன் |
மீன்வளத்துறை மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் | |
பதவியில் 25 திசம்பர் 1998 – 13 சூன் 2001 | |
பிரதமர் | காலிதா சியா |
முன்னையவர் | காசி ஃபசீயுர் ரஹ்மான் (acting) சதீஷ் சந்தர ராய் |
பின்னவர் | சாதிக் ஹொசைய்ன் கோகா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1945 (அகவை 78–79) நவகாளி மாவட்டம், கிழக்கு வங்காளம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் |
தேசியம் | வங்கதேசத்தவர் |
அரசியல் கட்சி | ஜாதியா சமஜ்தாந்த்ரிக் தள் |
வேலை | அரசியல்வாதி |
தொடக்க கால வாழ்க்கை.
தொகுரப் 1945 இல் பிறந்தார். 1969 முதல் 1970 வரை கிழக்கு பாகிஸ்தான் சத்ரா லீக் என்ற மாணவர் அரசியல் அமைப்பின் பொதுச் செயலாளராக இருந்தார். 1969 ஆம் ஆண்டு கிழக்கு பாகிஸ்தானில் நடந்த பொதுமக்கள் கிளர்ச்சியின் தலைவராக இருந்தார். டாக்கா பல்கலைக்கழக மத்திய மாணவர் சங்கத்தின் துணைத் தலைவராக 1971 மார்ச் 2 அன்று வங்காளதேசத்தின் கொடியை ஏற்றிய முதல் நபர் இவர் ஆவார்.[1]
தொழில் வாழ்க்கை
தொகுவங்காளதேசத்தின் விடுதலைப் போராட்டத்தை ஏற்பாடு செய்தவர்களில் இவரும் ஒருவர். சத்ரா லீக் தலைவர் நூர் ஆலம் சித்திக், அப்துல் குட்டஸ், ஏ. எஸ். எம் அப்துர் ரப் மற்றும் ஷாஜகான் சிராஜ் ஆகியோரின் தலைமையில், சுதந்திர வங்கதேசத்தின் கொடி 1971 மார்ச் 2 அன்று டாக்கா பல்கலைக்கழகத்தில் ஏற்றப்பட்டது. சுதந்திர பங்களாதேஷின் கொடி முதலில் ஏ. எஸ். எம் அப்துர் ரப் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. டாக்கா பல்கலைக்கழகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க போட்-தாலாவில், ஏ. எஸ். எம் அப்துர் ரப் பங்களாதேஷின் கொடியை ஷேக் முஜிபுர் ரஹ்மானிடம் ஒப்படைத்தார். பங்களாதேஷ் சுதந்திரம் பெற்ற பிறகு, ரப் இடதுசாரி ஜாதியா சமாஜ்தாந்த்ரிக் தளம் (தேசிய சோசலிஸ்ட் கட்சி) என்ற கட்சியை உருவாக்கினார். இவர் செராஜுல் ஆலம் கான் மற்றும் ஷாஜகான் சிராஜ் ஆகியோருடன் சேர்ந்து ஷேக் முஜிபுர் ரஹ்மான் தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக ஒரு நிலைப்பாட்டை எடுத்தார். 1974 மார்ச் 17 அன்று ராம்னாவில் உள்ள உள்துறை அமைச்சரின் இல்லத்தை நோக்கிய பேரணிக்கு இவர் தலைமை தாங்கினார், அப்போது ஜாதியா ரக்கி பாஹினி கூட்டத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். ராப் 1974 ராம்னா படுகொலையிலிருந்து தப்பிப்பிழைத்தவர். 1975 நவம்பரில் நடந்த ஆட்சி கவிழ்ப்பில் ஜாதியா சமாஜ்தாந்த்ரிக் தளம் ஈடுபட்டதால், ஆட்சியைப் பிடித்த பின்னர் அதிபர் அபு சதாத் முகமது சயீம் எம். ஏ. ஜலீல் மற்றும் ரப் ஆகியோரை விடுவித்தார்.
ரப் 1988-ஆம் ஆண்டில் எதிர்க்கட்சித் தலைவரானார், மேலும் 1996 முதல் 2001 வரை ஷேக் ஹசீனாவின் அமைச்சரவையில் கப்பல் துறை அமைச்சராகவும் பின்னர் மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.[4][5][6]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "A S M Abdur Rob" (in en). The Daily Star. 2016-03-04. https://www.thedailystar.net/star-weekend/mad-genius/s-m-abdur-rob-785749.
- ↑ "Inu fails to convince dissidents" (in en). The Daily Star. 2016-03-14. https://www.thedailystar.net/frontpage/inu-fails-convince-dissidents-790906.
- ↑ "Hasina's cabinet sets a record" (in en). Gulf News. https://m.gulfnews.com/news/uae/general/hasina-s-cabinet-sets-a-record-1.419613.
- ↑ Ahsan, Syed Badrul (2007-02-23). "All those Peripatetic People". The Daily Star. Archived from the original on 2018-02-07. பார்க்கப்பட்ட நாள் 2018-10-24.
- ↑ "JSD (Rab) calls 48-hr hartal in Ramgati". The Daily Star. 1999-01-17. https://www.thedailystar.net/news/jsd-rab-calls-48-hr-hartal-in-ramgati.
- ↑ "Italy can help build telecom & energy sector infrastructure". The Daily Star. 1998-01-10. https://www.thedailystar.net/news/italy-can-help-build-telecom-energy-sector-infrastructure.