ஏ. சகுந்தலா

ஏ. சகுந்தலா தமிழ்த் திரைப்பட நடிகையாவார். தமிழ்த் திரைப்பட நடிகர் பி. யு. சின்னப்பா இவரின் கணவராவார். பிருத்விராஜன் திரைப்படத்தில் பி. யு. சின்னப்பா பிருத்விராஜனாகவும், சகுந்தலா சம்யுக்தையாகவும் நடித்தனர். அதன்பிறகு, 1944 ஆம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டனர். இந்த இணையருக்கு ராஜ் பகதூர் எனும் மகன் இருந்தார்.

மனோன்மணி [1], பிருத்விராஜன் [2], வேணுகானம், சக்திமாயா,கோகிலவாணி ஆகியன ஏ. சகுந்தலா நடித்த திரைப்படங்களாகும்.

மேற்கோள்கள் தொகு

  1. ராண்டார் கை (19 திசம்பர் 2010). "Manonmani 1942". தி இந்து இம் மூலத்தில் இருந்து 2013-02-03 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130203222954/http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/article961803.ece. 
  2. ராண்டார் கை. "Prithvirajan (1942)". தி இந்து இம் மூலத்தில் இருந்து 5 December 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20141205042901/http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/prithvirajan-1942/article788556.ece. பார்த்த நாள்: 2014-12-05. 

உசாத்துணை தொகு

  • பக்கம் எண்: 276, அஜயன் பாலா எழுதிய தமிழ் சினிமா வரலாறு - பாகம் 1, 1916-1947 நூல் (முதற் பதிப்பு, டிசம்பர் 2019; வெளியீடு: பாலுமகேந்திரா நூலகம் & நாதன் பதிப்பகம், சென்னை - 93.)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._சகுந்தலா&oldid=3586384" இருந்து மீள்விக்கப்பட்டது