ஏ. சபாபதி முதலியார்

இந்திய அரசியல்வாதி

இராவ் பகதூர் ஏ. சபாபதி முதலியார் (A. Sabhapathy Mudaliar, 1838 – 29 அக்டோபர் 1903) தென்னிந்திய மாநிலமான கர்நாடாகாவின் பெல்லாரியைச் சேர்ந்த புரவலரும், அரசியல்வாதியும் ஆவார். பெல்லாரியில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை அல்லது மாவட்ட மருத்துவமனைக்கு இவர் நிலத்தையும் கட்டிடத்தையும் நன்கொடையாக வழங்கியதைத் தொடர்ந்து இவரது பெயரிடப்பட்டது.[1] பெல்லாரியில் உள்ள புரூஸ்பேட்டை பகுதியில் உள்ள ஒரு தெருவுக்கு இவரது பெயரிடப்பட்டது.

ஏ. சபாபதி முதலியார்
பிறப்பு1838
இறப்புஅக்டோபர் 29, 1903 (அகவை 65)
இராயப்பேட்டை, சென்னை
அறியப்படுவதுஅரசியல்வாதி, புரவலர்

இவர் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பெல்லாரி நகராட்சி மன்றத்தின் உறுப்பினராக இருந்தார். அதில் ஒன்பது ஆண்டுகளில் இவர் அதன் தலைவராக இருந்தார்.[2] 1902ஆம் ஆண்டு ஒரு முறை, பெல்லாரி நகராட்சி மன்றத்தின் தலைவராக சபையின் 17 உறுப்பினர்களில் 13 பேரின் வாக்குகளால் அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட போதிலும், இவர் தேர்ந்தெடுக்கப்பட்டதை எந்த விளக்கமும் இன்றி சென்னை மாகாண அரசாங்கத்தால் சட்டப்பூர்வமான இரத்து செய்யும் அதிகாரத்தில் இரத்து செய்யப்பட்டது. அந்த நேரத்தில் காம்போர்னின் நாடாளுமன்ற உறுப்பினர் வில்லியம் கெய்ன் ஐக்கிய இராச்சியத்தின் மக்களவையில் இந்த பிரச்சினையை எழுப்பினார்.[2]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._சபாபதி_முதலியார்&oldid=3698746" இருந்து மீள்விக்கப்பட்டது